கிறிஸ்தவ மறைசாட்சிகளின் இறுதி மன்றாட்டு, ழான்-லேயோன் ழெரோம் வரைந்தது
காணொளி
எல்லாம் நன்றாக இருக்கும்போது கடவுளை “அன்பு செய்வது” எளிது. ஆனால் எல்லாம் நன்றாக இருக்கும்போது, நமது அன்பு சோதிக்கப்படுவதில்லை. மனிதத் துன்பத்தின் வழியாக வரும் சோதனை, கடவுள்மீதான நமது அன்பைத் தெளிவாக்குகிறது. இது நமது ஆன்மிக வாழ்வுக்கு மிகுந்த பலனளிக்கக்கூடும். வாழ்வின் இன்னல்கள் வேறெதுவுமல்ல, வெறும் துயரமான, துரதிர்ஷ்டவசமான சுமைகளே என்றும், எப்பாடுபட்டாவது அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் நம்புவது எளிது. வேண்டுமென்றே இன்னல்களை உருவாக்கிக்கொள்வது அறிவீனமாக இருந்தாலும், இவ்வாழ்வில் நம் ஒவ்வொருவருக்கும் அவற்றில் ஒரு பங்கு இருக்கும். எனவே, வாழ்வின் ஒவ்வொரு இன்னலையும் துன்பத்தையும், கடவுள்மீதான உங்கள் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கும், அதன் வழியாக அவர்மீதான உங்கள் அன்பை வளர்த்துக்கொள்வதற்குமான வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாழ்வில் பெரிதும் துன்புற்றாலும், அத்துன்பம் முழுவதிலும் கடவுளை அன்பு செய்யத் தேர்ந்தெடுத்து, அந்தத் துன்பத்தையே தனது புனித வளர்ச்சியின் ஊற்றாக மாற்றிக்கொள்ளும் ஆன்மா எத்துணைப் பேறுபெற்றது! (காண்க: நாட்குறிப்பு #1014).
ஒவ்வொரு நாளும் நீங்கள் எதைப் பற்றிக் குறை கூறுகிறீர்கள்? எது உங்களுக்குச் சுமையாக இருக்கிறது? பல வேளைகளில் நாம் இந்தச் சுமைகளைவிட்டு ஓடிவிடுகிறோம் அல்லது கோபப்படுகிறோம். உங்கள் போராட்டங்களைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க முயலுங்கள். உங்கள் நம்பிக்கையையும் அன்பையும் ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகளாக அவற்றைக் காண முயலுங்கள். வாழ்வின் ஒவ்வொரு துன்பமும் ஒவ்வொரு சுமையும் சிலுவையின் ஆன்மிக வல்லமையால் நிறையப் பெறும் வாய்ப்பைக் கொண்டுள்ளன. அவற்றை அன்போடு ஏற்றுக்கொள்வதன் வழியாக நாம் சிலுவையைத் தழுவிக்கொள்கிறோம். சிலுவையைத் தழுவிக்கொள்வதன் வழியாக நாம் கடவுளை இன்னும் அதிகமாக அன்பு செய்கிறோம். இன்னல்கள் உங்கள் வாழ்க்கைத் தரத்தைத் தாழ்த்துகின்றன என்று எண்ணாதீர்கள். அருளின் பயனாக அவை என்னவாக அமைகின்றன என்பதை உணருங்கள். அவை புனிதத்தில் வளர்வதற்கும் கடவுளின் இரக்கத்தை இன்னும் அதிகமாகப் பெறுவதற்குமான வாய்ப்புகள்.
ஆண்டவரே, நான் அனுபவிக்கும் இன்னல்களால் வாழ்வில் மனம் தளரும்போதும், கோபமடையும்போதும், நம்பிக்கை இழக்கும்போதும், அந்தப் போராட்டத்தை இன்னும் அதிக நம்பிக்கைக்கான வாய்ப்பாகப் பயன்படுத்த எனக்கு உதவியருளும். ஆண்டவரே, எல்லாவற்றிலும் நான் இன்னும் அதிகமாக உம்மைப் போல் ஆகும்படி, சிலுவையை நோக்கி ஓடிவந்து, உமது சிலுவையிலிருந்து பொழிந்த அன்பைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். அன்பு ஆண்டவரே, குறிப்பாக நான் உம்மிடம் ஒப்படைக்கும் வாழ்வின் ஒவ்வொரு துன்பத்தின் வழியாகவும் என் அன்பைப் பெருகச் செய்யும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
ஜூலை 11 – மடாதிபதியான புனித பெனடிக்டின் நினைவு
இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




