தமிழ்

சிந்தனை 10: இறை இரக்கத்தின் திருத்தூது இயக்கம்

புனித ஃபவுஸ்தினாவின் நாட்குறிப்பு பல்வேறு வழிகளில் ஒரு புதிய பக்தி வடிவத்திற்கு நம்மை அழைக்கிறது. நமது தனிப்பட்ட பக்தியோடு, இரக்கத்தின் திருத்தூதர்களாக இருக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். நீங்கள் இரக்கத்தின் திருத்தூதரா? திருத்தூது இயக்கம்…

சிந்தனை 364: இறக்கும் நிலையில் இருப்பவர்களுக்காகச் செபம்

உங்கள் நிலைவாழ்வின் மீட்பைப் பொறுத்தவரை, உங்கள் மரண நேரம் மிகவும் முக்கியமானது.  “அருள் நிறைந்த மரியே” என்னும் செபத்தை நீங்கள் செபிக்கும்போது, இந்தப் புனித நேரத்திற்காகவே குறிப்பாகச் செபிக்கிறீர்கள்.  அது ஒரு புனிதமான நேரம்.  ஆனால், தீயவன் மீண்டும் ஒருமுறை உங்களைத் தாக்கி, கவர்ந்துகொள்ள முயலும் நேரமும் அதுவே…

சிந்தனை 361: தியாகமும் செபமும்

இதைப் புரிந்துகொள்வதும் நம்புவதும் கடினமாக இருக்கலாம்; இருப்பினும், தூய செபத்துடன் இணைந்த அகத் தியாகம் உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கு வியப்புக்குரிய நன்மையை விளைவிக்கிறது.  உண்மையில், நாள்தோறும் அகத்தளவில் அர்ப்பணித்த புனித ஆன்மாக்களின் வல்லமை மறைப்பணியாளர்களுக்கு இல்லையென்றால்…

சிந்தனை 355: வீண்பேச்சு, சோம்பியிருக்கும் ஆன்மாவின் அடையாளம்

சிலர் பிறரைப் பற்றிப் பேசுவதில் மிகவும் வல்லவர்கள். அவர்களைப் பற்றித் தொடர்ந்து கருத்துகளையும் தீர்ப்புகளையும் வழங்குகிறார்கள்; எல்லாவற்றையும் புரிந்துகொண்டவர்கள் போலத் தாராளமாகப் பேசுகிறார்கள். இவர்களைப் போல் நீங்களும் இருக்காதீர்கள். பிறருடைய செயல்களில் தங்கள் மனத்தையும் நாவையும் ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர்கள்…

சிந்தனை 353: மகிமைக் கீதம்

கடவுளின் படைப்பில் இயல்பாக அமைந்துள்ள ஒழுங்கையும் தாளலயத்தையும் சார்ந்து, அதன் இயற்கை விதிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதே இசை.  சில இசை, உலகியல் உண்மைகளை மகிமைப்படுத்துவதற்குப் படைப்பிலுள்ள இயற்கை ஒழுங்கைப் பயன்படுத்துகிறது.  சில இசை வடிவங்கள் பாவத்தையும் ஒழுங்கின்மையையும்கூட வெளிப்படுத்துகின்றன.  ஆனால்…

சிந்தனை 352: தண்டனையும் குற்றவுணர்வும்

கடவுளின் தண்டனையைப் பற்றிச் சிந்திப்பது இனிமையானதாக இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் அவரது தண்டனைகள் உண்மையானவை என்பதையும், அவை அவரது அளவற்ற இரக்கத்தின் செயல் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆன்மாக்கள் கடவுளிடமிருந்து விலகி, அவரது இரக்கத்தை மறுக்கும்போது, அது அவரது இதயத்தை ஆழமாகக் காயப்படுத்துகிறது.  இதன் விளைவாக, கடவுள்…

சிந்தனை 351: கடவுளை அறிவதா, அனுபவிப்பதா

கடவுளை அறிவதே உங்கள் இடையறாத இலக்காக இருக்க வேண்டும். திருவிவிலியத்தையும் திருஅவையின் போதனைகளையும் புனிதர்களின் வாழ்க்கையையும் படிப்பது இந்த முயற்சிக்கு உதவுகிறது. ஆனால் கடவுளை அறிவது வாழ்க்கையின் இறுதி இலக்கு அல்ல. அறிவு நம்பிக்கையிலிருந்து வருகிறது; நம்பிக்கையோ கடவுள் அளிக்கும் கொடை. ஆனால் முழுமையாக…

சிந்தனை 350: ஆராதனையில் அழகு

உலகம் அழகானது; அது கடவுளின் அழகை வெளிப்படுத்துகிறது. ஆனால் நற்கருணை போன்ற ஆன்மிக உண்மைகள் அதைவிடப் பன்மடங்கு அழகானவை.  மிகப் புனித நற்கருணையில் பிரசன்னமாக இருக்கும் கடவுளின் அழகைக் காண, உங்களுக்கு நம்பிக்கையின் கண்கள் தேவை.  இந்த அழகைக் காணும் உங்கள் பார்வையைக் கூர்மையாக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று ஆராதனை.  பெற்றுக்கொண்டாலும்…

சிந்தனை 346: பிறரிடம் உள்ள கொடைகள்

பிறருடைய வாழ்வில் கடவுளின் கொடைகளைக் கண்டுணர்ந்து, அதைக் குறித்து மகிழ்வது, நீங்கள் அவர்களுக்குச் செய்யக்கூடிய ஓர் இரக்கச் செயலாகும். வருந்தத்தக்க வகையில், பிறரைக் குறித்துப் பொறாமைப்படவோ அவர்களுடைய நலனைக் கண்டு மனம் கசக்கவோ அடிக்கடி சோதனை ஏற்படலாம். குறிப்பாக, அவர்களுடைய இயல்பான திறமைகளையோ அவர்களுடைய வாழ்வில் கடவுளின் அருளையோ காணும்போது இவ்வாறு நேரலாம். ஆனால்…

சிந்தனை 345: இறைவனில் மூழ்குதல்

நீங்கள் எப்போதாவது இறைவனில் திளைத்ததுண்டா?  பெரும்பாலான மக்களுக்கு இது அரிதான ஓர் அனுபவம்; பலருக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டதே இல்லை.  இறைவனில் திளைப்பது அல்லது மூழ்குவது என்பது, அவரது முன்னிலையில் உங்களையே மறந்துவிட்டதுபோல் உணரும் அளவுக்கு இறைவேண்டலில் ஆழ்ந்திருப்பதாகும்.  இவ்வாறு நிகழும்போது, ஆண்டவர் உங்களை முழுமையாக…