தமிழ்

சிந்தனை 354: பாவ வலையின் சிக்கல்களை அவிழ்த்தல்

ஒருவர் பொய் சொல்லத் தொடங்கி, அதையே பழக்கமாக்கிக்கொள்ளும்போது, இறுதியில் பொய்களின் வலையில் சிக்கிக்கொள்வார். ஒரு பொய் இன்னொரு பொய்க்கு வழிவகுக்கும்; விரைவிலேயே இந்த வலையிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் தவிப்பார். இங்குதான் நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும். கடுமையாக நடந்துகொள்வது மிகவும் எளிது…

சிந்தனை 353: மகிமைக் கீதம்

கடவுளின் படைப்பில் இயல்பாக அமைந்துள்ள ஒழுங்கையும் தாளலயத்தையும் சார்ந்து, அதன் இயற்கை விதிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதே இசை.  சில இசை, உலகியல் உண்மைகளை மகிமைப்படுத்துவதற்குப் படைப்பிலுள்ள இயற்கை ஒழுங்கைப் பயன்படுத்துகிறது.  சில இசை வடிவங்கள் பாவத்தையும் ஒழுங்கின்மையையும்கூட வெளிப்படுத்துகின்றன.  ஆனால்…

சிந்தனை 351: கடவுளை அறிவதா, அனுபவிப்பதா

கடவுளை அறிவதே உங்கள் இடையறாத இலக்காக இருக்க வேண்டும். திருவிவிலியத்தையும் திருஅவையின் போதனைகளையும் புனிதர்களின் வாழ்க்கையையும் படிப்பது இந்த முயற்சிக்கு உதவுகிறது. ஆனால் கடவுளை அறிவது வாழ்க்கையின் இறுதி இலக்கு அல்ல. அறிவு நம்பிக்கையிலிருந்து வருகிறது; நம்பிக்கையோ கடவுள் அளிக்கும் கொடை. ஆனால் முழுமையாக…

சிந்தனை 346: பிறரிடம் உள்ள கொடைகள்

பிறருடைய வாழ்வில் கடவுளின் கொடைகளைக் கண்டுணர்ந்து, அதைக் குறித்து மகிழ்வது, நீங்கள் அவர்களுக்குச் செய்யக்கூடிய ஓர் இரக்கச் செயலாகும். வருந்தத்தக்க வகையில், பிறரைக் குறித்துப் பொறாமைப்படவோ அவர்களுடைய நலனைக் கண்டு மனம் கசக்கவோ அடிக்கடி சோதனை ஏற்படலாம். குறிப்பாக, அவர்களுடைய இயல்பான திறமைகளையோ அவர்களுடைய வாழ்வில் கடவுளின் அருளையோ காணும்போது இவ்வாறு நேரலாம். ஆனால்…

சிந்தனை 344: பாவத்தைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள்

இந்தத் தலைப்பு வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றலாம்.  பாவத்தைத் தவிர்க்க நீங்கள் முனைப்புடன் முயல வேண்டும் என்ற அளவில், அதைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருக்க வேண்டும்.  ஆனால், கடவுளின் இரக்கத்தைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டிருப்பது பெருங்கடலுடன் ஒப்பிடுகையில் ஒரு துளி நீர் மட்டுமே என்பதை உணர்ந்தால், நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள்…

சிந்தனை 343: எல்லாவற்றிலும் ஆண்டவரை மகிமைப்படுத்துதல்

எல்லாம் நன்றாக நடக்கும்போது மட்டும் நன்றியுடன் இருப்பது எளிது. ஆனால், காலம் கடினமாகும்போது, நம்மீதே பரிதாபப்பட்டுக்கொண்டு நமக்குள்ளேயே முடங்கிவிட முனைகிறோம். இருப்பினும், எல்லாவற்றிலும் ஆண்டவரை மகிமைப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் உங்களுக்கு எண்ணற்ற ஆசிகளையும் அருள்களையும் அளிக்கிறார்; அவற்றிற்காக நீங்கள் அளவற்ற…

சிந்தனை 338: இரகசியம் காத்தல்

பிறருக்கு நாம் செய்யக்கூடிய ஓர் அன்புச் செயல், அவர்கள் பகிர்வதை இரகசியமாகக் காப்பதாகும்.  ஒரு பிரச்சினையோ குழப்பமோ உள்ளவர்கள் நம்மிடம் வந்து, அதைப் பிறரிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அனுபவம் நம் அனைவருக்கும் உண்டு.  இவ்வாறு நம்பி ஒப்படைக்கப்படும் புனிதமான இரகசியத்தை உங்களால் காக்க முடியுமா?  இரகசியம் காப்பது பிறருக்குச் செய்யும் ஓர் அருமையான இரக்கச் செயலாகும்.  நீங்கள்…

சிந்தனை 336: உலகச் செல்வங்களா…அல்லது கடவுளா?

உலகப் பொருள்களை நாம் எவ்வளவு அடிக்கடி விரும்புகிறோம் என்பதை நினைத்துப் பார்ப்பது சுவாரசியமானது. உலகிலுள்ள செல்வங்கள் அனைத்தும் உங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தாலும், அவற்றால் உங்கள் இதயத்தின் ஏக்கத்தை நிறைவு செய்ய முடியாது. உங்களுக்குள் இருக்கும் வெறுமையை நிரப்புவது ஒன்றே ஒன்றுதான்: ஆண்டவரும் அவரது திருவுளமுமே. வேறு எதுவும்…

சிந்தனை 334: ஆன்மாக்களுக்குப் பணிசெய்தல்

பிறருக்குப் பணிசெய்யும் திறன், நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய ஆசிகளுள் ஒன்றாகும். பல வழிகளில், குறிப்பாக நமக்குரிய தனிப்பட்ட அழைப்புக்கு ஏற்ப, நாம் அவர்களுக்குப் பணிசெய்கிறோம். ஆனால் ஒருவருக்கு நாம் ஆற்றக்கூடிய மிகப் பெரிய பணி, இறை இரக்கத்தின் பணியாளராக இருந்து, அவர்களை மகிமைகளை நோக்கி வழிநடத்துவதே…

சிந்தனை 333: எளிமை

வாழ்க்கை சில நேரங்களில் சிக்கலானதாகத் தோன்றலாம்; நாமும் அப்படித் தோன்றலாம்.  ஆனால், வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்து, கடவுளின் பார்வையிலும் திருவுளத்திலும் வாழ்க்கை எளிமையானது என்பதை நாம் உணர வேண்டும் என்பதே உண்மை.  நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு நாளும் அவருக்கு “ஆம்” என்று சொல்லி, அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து, நம்பிக்கை கொள்வதுதான் என்பதால் வாழ்க்கை எளிமையானது…