தமிழ்

சிந்தனை 214: முழுமையான மன்னிப்பு

நீங்கள் ஒரு கடுமையான குற்றத்தைச் செய்ததால் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.  நீங்கள் செய்ததற்காக மனம் வருந்தி, அதை முழுமையாக ஒப்புக்கொண்டீர்கள்.  உங்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் நாளில், விரைவில் அங்கேயே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் என்பதை அறிந்தவராக, நீங்கள் அடைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து கைவிலங்கிடப்பட்டு வந்தீர்கள்.  ஆனால், நீதிபதி…

சிந்தனை 213: மெய்யுணர்வு என்னும் ஆன்மிகக் கொடை

கடவுளின் மறையுண்மைகளை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா?  நம் திருஅவையின் விசுவாசத்தைப் பல ஆண்டுகளாகக் கற்றறிந்த ஓர் இறையியலாளராக நீங்கள் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.  நம் திருஅவையின் இறையியல் துறைகள் அனைத்தையும் பற்றிய அறிவு, இவற்றைக் குறித்த உண்மையான புரிதலை உங்களுக்குக் கட்டாயம் அளிக்குமா…

சிந்தனை 211: இறையன்னையின் அருகில்

ஒரு தாய் தன் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காகத் தன் உயிரையும் மனமுவந்து கொடுக்கத் தயாராக இருப்பதால், அவளுடைய அன்பை “தீவிரமானது” என்று விவரிக்கலாம். தன் குழந்தை ஆபத்தில் இருக்கும்போதோ, வேதனையில் இருக்கும்போதோ, தேவையில் இருக்கும்போதோ, அவளுடைய தாயுணர்வு உடனே விழித்தெழுகிறது; தன் குழந்தையின் பாதுகாப்புக்காகத் தன் நலனை…

சிந்தனை 210: இறையன்பின் ஒளியில் நற்செயல்கள்

நீங்கள் கடினமாக உழைக்கிறீர்களா? நல்லவராக இருக்க முயல்கிறீர்களா? நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்களா? நல்லவராக இருக்க முயல்வது நிச்சயமாக நல்லதே. ஆனால் அவ்வாறு முயலும்போது, இறையன்பே நம் செயல்களின் ஊற்றாக மாறியிருந்தாலன்றி, நமது “நன்மைத்தனம்” கடவுளின் பார்வையில் உண்மையிலேயே நல்லது என்று நாம் ஒருபோதும் எண்ணக்கூடாது…

சிந்தனை 209: பாவப் பழக்கத்தை வெல்லுதல்

பாவத்தை வெல்வதற்கு இறைவனின் இரக்கம் தேவை.  பல வேளைகளில் நமது சொந்த முயற்சியால் பாவத்தை வெல்ல முயல்கிறோம்.  இது பயனற்ற முயற்சியே; ஏனெனில் உங்கள் சொந்த முயற்சியால் உங்கள் பாவத்தை ஒருபோதும் வெல்ல முடியாது.  நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் பாவத்திலிருந்து விடுபட ஒரே ஒரு வழிதான் இருக்கிறது; அது…

சிந்தனை 208: இரக்கத்தின் ஆன்மிக அம்பு

பொதுவாக, ஓர் அம்பு காயப்படுத்திக் கொல்கிறது. வரலாறு நெடுகிலும் போரிலும் வேட்டையிலும் அம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இரக்கத்தின் ஆன்மிக அம்பு மிகவும் வேறுபட்டது. இறைவாக்கினர் சிமியோன் நம் புனித அன்னையிடம் கூறிய வார்த்தைகளை நினைவுகூருங்கள்: “உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்” (லூக்கா 2:35). மேலும்…

சிந்தனை 207: கிறிஸ்துவின் திருஇதயத்தில் ஆறுதல் பெறுதல்

அன்பும் கனிவும் மிக்க பெற்றோரிடம் நெருங்கி அணைந்துகொள்வதில் குழந்தைகள் பெரும்பாலும் மிகுந்த ஆறுதல் அடைகிறார்கள்.  இந்த அன்புக் கரங்கள் இறுக அணைத்துக்கொள்ளும்போது ஆழ்ந்த நிறைவு கிடைக்கிறது.  இத்தகைய தருணங்களில் அச்சமும் கவலையும் அகல்கின்றன; துயரம் இருந்த இடத்தில் அமைதியும் ஆறுதலும் மீண்டும் மலர்கின்றன.  அவ்வாறே இருக்க வேண்டும்…

சிந்தனை 206: ஆன்மிகப் பதுக்கல்

ஆன்மிக வாழ்வுக்கு நேரக்கூடிய ஓர் உண்மையான ஆபத்தை “ஆன்மிகப் பதுக்கல்” என்று அழைக்கலாம். கடவுளின் இரக்கத்தின் கருவியாக மாறுவதற்குப் பதிலாக, அதன் இறுதிப் பயனாளியாகத் தம்மையே ஆக்கிக்கொள்ள முயல்பவரிடம் இது காணப்படும். கடவுளின் இரக்கத்தின் இறுதிப் பயனாளியாக இருக்க முயல்வதால், ஒருவர்…

சிந்தனை 204: உங்கள் ஆன்மாவின் புல்லிவட்டம்

மலரின் புல்லிவட்டம் என்பது உருவாகிவரும் இதழ்களைச் சூழ்ந்து, அவை வளரும்போது அவற்றைப் பாதுகாக்கும் புற இலைப்பகுதி ஆகும். மென்மையான இதழ்கள் வளர்வதற்கு அது ஒருவகை “நாற்றங்காலாக” அமைகிறது. இந்த மறைவான இடத்தில் அவை வளரும்போது, புல்லிவட்டம் அவற்றைப் பாதுகாக்கிறது. அவை வளர்ச்சியடைந்ததும், புல்லிவட்டம் திறக்கிறது…

சிந்தனை 203: இரக்கத்தின் ஆழமும் அகலமும்

உலகிலுள்ள ஒவ்வொரு மணல் துகளையும் எண்ணும் பணி உங்களிடம் ஒப்படைக்கப்படுவதாகக் கற்பனை செய்துபாருங்கள்.  அது நிறைவேற்ற இயலாத பணி என்பது தெளிவாகத் தெரியும்.  உண்மையில், உலக மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தாலும் அத்தகைய பணியை நிறைவேற்ற முடியாது.  சில காரியங்கள் நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டவை.  மற்றொரு பணியோ இதைவிடவும்…