தமிழ்

சிந்தனை 336: உலகச் செல்வங்களா…அல்லது கடவுளா?

உலகப் பொருள்களை நாம் எவ்வளவு அடிக்கடி விரும்புகிறோம் என்பதை நினைத்துப் பார்ப்பது சுவாரசியமானது. உலகிலுள்ள செல்வங்கள் அனைத்தும் உங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தாலும், அவற்றால் உங்கள் இதயத்தின் ஏக்கத்தை நிறைவு செய்ய முடியாது. உங்களுக்குள் இருக்கும் வெறுமையை நிரப்புவது ஒன்றே ஒன்றுதான்: ஆண்டவரும் அவரது திருவுளமுமே. வேறு எதுவும்…

சிந்தனை 335: என்றும் மன்னித்தல்

உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபிப்பதும், அவர்களை மிகுந்த மரியாதையுடனும் பரிவுடனும் நடத்துவதும் வாழ்வில் செய்வதற்கு மிகவும் கடினமான செயல்களில் அடங்கும். ஆனால் அவர்களை வெறுப்பதாலோ, அவர்கள்மீது கடுமையாகச் சீறுவதாலோ என்ன பயன்? அவர்களுக்கு இந்த “தீங்கை” இழைப்பது, அவர்களுடைய ஆன்மாவைவிட உங்கள் சொந்த ஆன்மாவுக்கே மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மன்னியுங்கள்…

சிந்தனை 334: ஆன்மாக்களுக்குப் பணிசெய்தல்

பிறருக்குப் பணிசெய்யும் திறன், நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய ஆசிகளுள் ஒன்றாகும். பல வழிகளில், குறிப்பாக நமக்குரிய தனிப்பட்ட அழைப்புக்கு ஏற்ப, நாம் அவர்களுக்குப் பணிசெய்கிறோம். ஆனால் ஒருவருக்கு நாம் ஆற்றக்கூடிய மிகப் பெரிய பணி, இறை இரக்கத்தின் பணியாளராக இருந்து, அவர்களை மகிமைகளை நோக்கி வழிநடத்துவதே…

சிந்தனை 333: எளிமை

வாழ்க்கை சில நேரங்களில் சிக்கலானதாகத் தோன்றலாம்; நாமும் அப்படித் தோன்றலாம்.  ஆனால், வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்து, கடவுளின் பார்வையிலும் திருவுளத்திலும் வாழ்க்கை எளிமையானது என்பதை நாம் உணர வேண்டும் என்பதே உண்மை.  நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒவ்வொரு நாளும் அவருக்கு “ஆம்” என்று சொல்லி, அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து, நம்பிக்கை கொள்வதுதான் என்பதால் வாழ்க்கை எளிமையானது…

சிந்தனை 332: சிலுவையால் ஒருபோதும் சோர்வடையாதீர்கள்

ஆண்டவர் புனித ஃபவுஸ்தினாவிடம் துன்பங்களைப் பற்றி அதிகமாகப் பேசுகிறார்.  அவமானங்களாலும் உடல்நோயாலும் அவர் மிகவும் துன்புற்றார்.  அவரது துன்பங்கள் தமது சிலுவையுடன் ஒன்றிக்கப்படும்போது பெரும் வல்லமை பெறுகின்றன என்பதை இயேசு அவருக்கு நினைவூட்டுவதில் ஒருபோதும் சோர்வடையவில்லை.  இந்தச் செய்தியை ஒருபோதும்…

சிந்தனை 331: உங்கள் வலிமைக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை

உங்கள் வலிமைக்கு அப்பாற்பட்ட சிலுவையைச் சுமக்க ஆண்டவர் ஒருபோதும் உங்களை அனுமதிக்கமாட்டார் என்பதை அறிந்துகொள்வது முக்கியம்.  இதை நீங்கள் நம்புகிறீர்களா?  நம்புகிறீர்கள் என்றால், உங்களுக்கு முன்னுள்ள பாதையில் பார்வையைப் பதித்து, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றத் துணிவுடன் முன்னேற அந்த நம்பிக்கை உங்களுக்கு உதவ வேண்டும்.  போராட்டங்கள் உங்களை எதிர்கொண்டால், அவை… இருந்தாலும்கூட…