சிந்தனை 327: இறைவனின் மறைவான உடனிருப்பு
இறைவன் மறைந்திருக்கிறார். ஆனால் ஏன்? நாம் அவரை அக்கறையுடன் தேட வேண்டும் என்பதற்காக, மறைவு மற்றும் மௌனம் என்னும் திரைக்குள் அவர் ஒளிந்திருக்கிறார். அவரையே உங்கள் ஒரே ஏக்கமாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் விரும்புவதால், உங்கள் கவனத்தைச் சிதறடிக்கும் உலகக் காரியங்களோடு போட்டியிட அவர் விரும்புவதில்லை. உங்கள் இதயத்தில் மறைந்திருக்கும் அவரைத் தேட ஏங்குங்கள்…