தமிழ்

சிந்தனை 228: இறைவனின் மாறாத பிரசன்னம்

உங்கள் வாழ்வில் இறைவன் உயிர்ப்புடன் விளங்குகிறாரா? அவர் உங்களுக்குள் வாழ்கிறாரா? இரவும் பகலும் உங்கள் இதயத்தின் ஆழத்தில் அவர் பிரசன்னமாக இருக்கிறாரா? இறைவன் உங்களைவிட்டு விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும்; அதுதான் சாவான பாவம்…

சிந்தனை 224: பேசுவதா, பேசாமல் இருப்பதா

அளவுக்கு மீறிப் பேசுவதும், பிறரிடம் நம்மைப் பற்றி விளக்குவதும், குறிப்பாக நம் செயல்கள் நியாயமானவை என்று அவர்கள் எண்ணும்படி செய்வதும் மனிதரிடம் பொதுவாகக் காணப்படும் ஒரு போக்கு.  பிறர் நம்மைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்று நாம் உணரும்போது இது இன்னும் அதிகமாக நிகழ்கிறது.  ஆனால், இயேசு இதை மிக உயர்ந்த அளவில் அனுபவித்தார்…

சிந்தனை 191: அதிகம் பேசும் ஆன்மா

அளவுக்கு அதிகமாகப் பேச வேண்டும் என்ற தேவை, இறைவனுடன் ஒன்றித்திருக்கும் அக வாழ்வுக்கு உண்மையான ஓர் ஆபத்தாகும்.  இல்லை, பேசுவது பாவமல்ல; பல வேளைகளில் அது பிறரிடம் காட்டும் இரக்கச் செயலாகவும் இருக்கிறது.  ஆனால், அளவுக்கு அதிகமாகப் பேசுவது இறைவனின் இரக்கத்திற்குத் தடையாக இருக்கும் நேரங்களும் உண்டு.  பேசுவது, தன்னளவில்…

சிந்தனை 180: இயேசுவின் திருப்பாடுகள்

நற்செய்திகளை நன்கு அறிந்தவர்களாகிய நாம், சில வேளைகளில், கிறிஸ்துவின் துன்பங்களைக் குறித்து ஒருவித அலட்சிய உணர்வுக்கு ஆளாகலாம்.  ஒவ்வோர் ஆண்டும் அவரது பாடுகளின் வரலாறு வாசிக்கப்படுவதைக் கேட்கிறோம்; அவரது பாடுகளைச் சித்தரிக்கும் பல படங்களையும் பார்த்திருக்கிறோம். இவ்வாறு அவை நமக்குப் பழகிப்போனதால், அவை ஏற்படுத்த வேண்டிய உரிய தாக்கத்தை ஏற்படுத்த நாம் இடமளிக்கத் தவறலாம்…

சிந்தனை 154: மௌனமும் தாழ்மையும் நிறைந்த ஆராதனை

இயேசுவின் பிறப்பின்போது நிலவிய எளிய சூழலில் நம் புனித அன்னை இருந்த காட்சியை மனக்கண்முன் கொண்டுவாருங்கள். விலங்குகள் தங்கியிருந்த இந்த இடத்தைத் தவிர, அந்த நேரத்தில் அவருக்கு வேறு வீடு எதுவும் இல்லை. இருந்தாலும், அந்தப் புனித இரவின் அமைதியில், ஆழ்ந்த ஆராதனையோடும் அன்போடும் தம் குழந்தையை உற்றுநோக்கியபோது, அவர் தம் சொந்த வீட்டில் இருப்பதுபோல் உணர்ந்தார். அவர்…

சிந்தனை 145: அன்பின் வியப்பில் தன்னையே மறத்தல்

அன்பில் ஆழ்வது ஒருவரை “மெய்மறக்கச்” செய்யலாம். இத்தகைய மனித அன்பு உங்களை ஓரளவு பேச்சற்றவராக்கலாம்; நீங்கள் உணர்வதைத் துல்லியமாக வெளிப்படுத்துவது அவசியம் என்றோ, இயலும் என்றோகூட உங்களுக்குத் தோன்றாமல் போகலாம். ஆனால் கடவுள்மீதுள்ள அன்பு, மனித அன்பின் எந்த அனுபவத்தையும் கடந்தது. ஆகவே, அதை அனுபவிக்கும்போது…

சிந்தனை 137: சிலுவையில் ஆற்றல்

நீங்கள் செபிக்கும்போது, எப்போதாவது அமர்ந்து சிலுவைத் திருவுருவத்தை உற்றுநோக்குகிறீர்களா?  வெளிப்பார்வையில், சிலுவைத் திருவுருவம் புரிந்துகொள்ள முடியாத ஓர் உண்மையாகத் தோன்றுகிறது.  இத்தகைய கொடூரமான ஒரு நிகழ்வை நாம் ஏன் உயர்த்திப் போற்ற வேண்டும்?  இறைமகன் கொடூரமாகக் கொல்லப்பட்டது, முதலில் நம்மைக் கவரும் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம்.  இருப்பினும்…

சிந்தனை 132: புரிந்துகொள்ள இயலாத கடவுள்

அறிந்துகொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள ஓர் இயல்பு. ஏறக்குறைய எல்லாவற்றையும் அறிந்துகொள்ள விரும்பி, நாம் எளிதில் ஆர்வம் கொள்கிறோம். இதழ்கள், செய்திக் கட்டுரைகள், நிகழ்ச்சிகள், அன்றாட வம்புப் பேச்சுகள் போன்ற அனைத்தும் நமது ஆர்வத்தை நிறைவுசெய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஆர்வம் கடவுளை அறிந்துகொள்ளும் ஆவலாகவும்…

சிந்தனை 48: அமைதி

நமது நாவால் பிறரை வளரச் செய்யவும் முடியும், அவர்களைத் தாழ்த்தவும் முடியும். நமது நாவு நம் சொந்த ஆன்மாவிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடவுளின் தூண்டுதலால் வரும் வார்த்தைகளை நாவு பேசும்போது, நாம் புனிதத்தில் வளர்கிறோம். கடவுளிடமிருந்து வராத வார்த்தைகளை நாவு பேசும்போது, நமது ஆன்மாக்களுக்கும் பிறருக்கும் பெரும் தீங்கு விளைவிக்கிறோம். அந்த…

சிந்தனை 23: கடவுள் மௌனமாக இருப்பதுபோல் தோன்றும்போது

சில வேளைகளில், இரக்கமுள்ள நம் ஆண்டவரை இன்னும் அதிகமாக அறிய நாம் முயலும்போது, அவர் மௌனமாக இருப்பதுபோல் தோன்றும்.  ஒருவேளை பாவம் தடையாக இருக்கலாம்; அல்லது கடவுளைப் பற்றிய உங்கள் சொந்தக் கருத்து, அவரது உண்மையான குரலையும் உண்மையான பிரசன்னத்தையும் மறைக்க நீங்கள் அனுமதித்திருக்கலாம்.  வேறு சில வேளைகளில், இயேசு தமது பிரசன்னத்தை மறைத்துக்கொள்கிறார்…