தமிழ்

சிந்தனை 330: பிறருக்காகச் செபித்தல்

உங்கள் செபங்களின் வல்லமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.  இறை இரக்கத்தில் நீங்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வளவு ஆழமானதோ, அவ்வளவு வல்லமையுள்ளதாக உங்கள் செபங்கள் அவை தேவைப்படுவோருக்கு அமையும்.  ஆண்டவர் அனைத்தையும் அறிவார்; யாருக்கு என்ன தேவை என்பதையும் அவர் அறிவார்.  ஆனால், அவர் தமது அருளை வழங்க விரும்புவது…

சிந்தனை 310: தீயவனின் மடமை

அலகை உண்மையிலேயே இருக்கிறான்; அவனது சோதனைகளும் உண்மையானவை. அவன் உங்களை முழுமையான வெறுப்புடன் வெறுக்கிறான்; உங்கள் அழிவை விரும்புகிறான். இதை அறிந்திருப்பது நல்லது. ஆனால் தீயவன் மிகவும் தந்திரமானவனாகவும், பிறரைத் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பவனாகவும் இருக்கிறான். அப்பட்டமான பொய்களால் உங்களை நம்பவைப்பது பெரும்பாலும் இயலாது என்பதை அவன் அறிந்திருப்பதால், அவ்வாறு உங்களிடம் பேசுவது அரிது…

சிந்தனை 292: சிறப்பு இறையழைத்தல்களின் மதிப்பு

சிலர் துறவற வாழ்வில் செபமும் தனிமையும் நிறைந்த தனித்துவமான வாழ்க்கைக்கு அழைக்கப்படுகிறார்கள்.  குறிப்பாக, சிலர் தனிமைத் துறவு வாழ்வுக்கோ அடைநிலைத் துறவற வாழ்வுக்கோ அழைக்கப்படுகிறார்கள்.  இந்தப் புனித ஆன்மாக்கள் உலகிலிருந்து விலகியிருந்து, அமைதியான செபத்திலும் உழைப்பிலும் தங்கள் நாள்களைக் கழிக்கிறார்கள்.  ஆனால்…

சிந்தனை 287: அவமானப் போர்வை

“அவமானம்” என்பது பொதுமக்கள் முன் ஏற்படும் இழிவு, மானக்கேடு, சிறுமைப்படுத்தப்படுதல், சங்கடம் ஆகியவற்றைக் குறிக்கலாம். ஆனால் இயேசுவைப் பற்றிக் கூறும்போது அது தனிப்பொருள் பெறுகிறது. “அவமானப் போர்வை” என்பது இயேசு தமது சிலுவையின் காரணமாகப் பொதுமக்கள் முன் அனுபவித்த இழிவைக் குறிக்கிறது. அவர் பாவி என்றும் பொய்யர் என்றும் தீர்ப்பிடப்பட்டார். மக்களை ஏமாற்றியதாகவும் அரசாங்க அதிகாரிகளின் அதிகாரத்தைச் சீர்குலைக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் இலக்காக இருந்தார்…

சிந்தனை 283: பாவத்தை வெல்லுதல்

இறைவனின் இரக்கச் செய்தி மிகவும் எளிமையானது; இந்த நூலின் பல பக்கங்களைப் பற்றியோ புனித ஃபவுஸ்தினாவின் நாட்குறிப்பைப் பற்றியோ சிந்தித்த பின்னரும்கூட அதை நாம் எளிதில் தவறவிடலாம். இறைவனின் இரக்கச் செய்தி எடுத்துரைக்க வேண்டிய எளிய உண்மை இதுவே: நம் பாவங்களை ஒப்புக்கொள்வதில் நமக்கு எந்தவித அச்சமும் இருக்கக்கூடாது…

சிந்தனை 282: துன்பம், துன்புறுத்தல், கொடுமை மற்றும் அவமானம்

இந்தத் தலைப்பு பார்த்தவுடனே உங்களைக் கவர்வதாகத் தோன்றாமல் இருக்கலாம்.  இவற்றையெல்லாம் தாங்கிக்கொள்ள யார்தான் விரும்புவார்கள்?  ஆனால் இயேசு இவை அனைத்தையும் மிகக் கடுமையான அளவில் தாங்கிக்கொண்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இயேசு மகிழ்ச்சியாக இருந்தாரா?  அவரது ஆன்மா அமைதியில் இருந்ததா?  நிச்சயமாக.  இது வெளிப்படுத்துவது…

சிந்தனை 281: அசைக்க முடியாத இறைத்திருவுளம்

சில வேளைகளில், நாம் இறைவனை ஆழமாக அன்பு செய்யும்போது, அவருக்காகப் பெரிய செயல்களைச் செய்ய வேண்டும் என்ற வலுவான உந்துதல்கள் நமக்குள் எழுவதை உணரலாம்.  இருந்தாலும், நமது ஆவலும் உறுதியான தீர்மானமும் இருந்தபோதிலும், நமது பணி முன்னேற இறைவன் அனுமதிக்காததுபோல் தோன்றலாம்.  இதற்குக் காரணம் ஆண்டவர்…

சிந்தனை 270: இறைத்திருவுளத்தின் நுண்விவரங்கள்

உங்கள் வாழ்வில் இறைத்திருவுளத்தை ஏற்றுக்கொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், அதன் அனைத்து விவரங்களையும் ஏற்றுக்கொள்ளத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும். இறைத்திருவுளம் என்பது ஏதோ பிரம்மாண்டமான ஒரு பொதுவான கருத்து அல்ல. அவரது திருவுளத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது, அவரைப் பொதுவான விதத்தில் பின்பற்றத் தேர்ந்தெடுப்பதாகச் சொல்வது மட்டுமல்ல. மாறாக, அவரது திருவுளத்தைத் தேர்ந்தெடுப்பது…

சிந்தனை 267: நீதியா, இரக்கமா?

கடவுளின் நீதியைப் பற்றியும் அவரது இரக்கத்தைப் பற்றியும் பேசுவது பொருத்தமானதே.  அவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.  கடவுளுக்குப் பணிபுரிய மறுத்த வானதூதர்களுக்கு அவரது நீதித்தீர்ப்பு வழங்கப்பட்டதுபோலவே, மனந்திரும்ப மறுப்பவர்களுக்கும் அது வழங்கப்படும்.  ஆனால், இப்போதைக்கு, கடவுள் இரக்கமுள்ளவர் என்று கூறுவதே இன்னும் பொருத்தமானது.  உண்மையில்…

சிந்தனை 266: புனிதத்தை நோக்கிச் செல்லும்போது ஏற்படும் மனத்தளர்ச்சி

நீங்கள் புனிதராக விரும்புகிறீர்களா? உங்கள் பதில் “ஆம்” என்பதாக இருக்கும் என நம்புகிறோம். ஆனால் இந்தக் கேள்விக்குப் பதில் என்ன: உங்களால் புனிதராக முடியும் என்று நினைக்கிறீர்களா? இதற்குப் பதிலளிப்பது இன்னும் கடினமாக இருக்கலாம். புனிதத்தைப் பற்றிக் கனவு காண்பதும் அதை விரும்புவதும் எளிது…