படம்: ThuyHaBich — Pixabay தளத்தில்
காணொளி
உங்கள் ஆன்மாவை அழகுபடுத்துவது எது? செபம். உங்களைப் பாவத்திலிருந்து காப்பது எது? செபம். உங்களை நம்பிக்கையால் நிரப்புவது எது? செபம். புனிதத்தின் பாதையில் உங்களை வழிநடத்துவது எது? செபம். அனைத்திற்கும் திறவுகோல் செபமே. ஒவ்வொரு நாளும் செபிக்காவிட்டால், வாழ்க்கையில் திசை தெரியாமல், உங்கள் சொந்த ஞானத்தையும் திறமையையும் மட்டுமே சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறீர்கள். இத்தகைய நிலையில் இருப்பது அச்சத்திற்குரியது (காண்க: நாட்குறிப்பு #146).
நீங்கள் செபிக்கிறீர்களா? அவ்வப்போது மட்டுமோ, ஞாயிறு திருப்பலியிலோ, உணவுக்கு முன்போ செபிப்பதைப் பற்றிக் கேட்கவில்லை. உண்மையிலேயே ஒவ்வொரு நாளும் செபிக்கிறீர்களா? தனிமையில் சிறிது நேரம் செலவிட்டு, உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து கடவுளிடம் பேசுவதோடு, அவரும் உங்களிடம் பேச இடமளிக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும், நாள் முழுவதும், உங்களுடன் ஓர் அன்பின் உரையாடலைத் தொடங்க அவரை அனுமதிக்கிறீர்களா? இன்று உங்கள் செபப் பழக்கத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் மேற்கொள்ளும் உரையாடல்களிலேயே கடவுளுடனான உங்கள் அன்றாட உரையாடல்தான் மிக முக்கியமானது என்று உங்களால் நேர்மையாகச் சொல்ல முடியுமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இதற்கு முன்னுரிமை கொடுங்கள்; முதன்மையான முன்னுரிமை கொடுங்கள். மற்ற அனைத்தும் உரிய முறையில் அமையும்.
ஆண்டவரே, என் செப வாழ்வு பலவீனமாக இருப்பதை நான் அறிவேன். உம்முடனான என் அன்றாட உரையாடலுக்கு நான் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிவேன். ஒவ்வொரு நாளும் உறுதியான செபப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள எனக்கு உதவியருளும். அப்போது இந்தச் செப வாழ்வு என் வாழ்க்கையை வழிநடத்தும் ஒளியாக மாறும். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
பிப்ரவரி 21: புனித பேதுரு தமியான், ஆயரும் திருச்சபையின் மறைவல்லுநரும்
நான்காம் நாள் தியானங்கள்:
பாலைநிலத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்




