தமிழ்

சிந்தனை 185:  அளவற்ற வளங்களுடன் தாராளமாக வழங்குதல்

புனித அந்தோனியாரின் அப்பம், படைப்பாளர்: Lawrence OP, CC BY-NC-ND 2.0.

காணொளி

தொலைதூர நாடொன்றில் கடும் பஞ்சம் நிலவுவதை நீங்கள் அறிந்திருந்து, அந்தப் பஞ்சத்தைப் போக்க அளவற்ற வளங்களும் உங்களுக்கு அருளப்பட்டிருந்தால், தேவையில் இருப்போருக்கு இந்தக் கொடையை வழங்காமல் ஏன் வைத்திருப்பீர்கள்?  நீங்கள் அப்படிச் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறோம்.  உங்கள் பொறுப்பை உணர்ந்து, மிகுந்த தேவையில் இருப்போரின் தாகத்தையும் பசியையும் தணிக்க வேண்டியதைச் செய்வீர்கள் என நம்புகிறோம்.  ஆனால் இப்போது ஒரு பெரும் பஞ்சம் நிலவுகிறது; இந்தப் பஞ்சத்தைப் போக்க அளவற்ற வளம் உங்களுக்கு அருளப்பட்டுள்ளது.  கடவுளின் இரக்கத்திற்கான பசியும் தாகமுமே அந்தப் பஞ்சம்.  எனினும், இந்த இரக்கத்திற்காகப் பட்டினியால் வாடுவோரில் பெரும்பாலானோர் தாங்கள் தேடுவது இதைத்தான் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.  உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அளவற்ற வளம் கடவுளின் இரக்கமே.  தமது இரக்கத்தைப் பகிர்ந்தளிக்கும் பணியை அவர் உங்களிடம் ஒப்படைத்துள்ளார்; உங்களுக்கு எதையும் வழங்காமல் நிறுத்திவைப்பதில்லை.  இந்த அருளோடு நீங்கள் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை உணர்கிறீர்களா?  தமது எல்லையற்ற இரக்கத்தைப் பிறரிடம் கொண்டுசெல்லக் கடவுள் விடுக்கும் அழைப்பிலிருந்து பின்வாங்காதீர்கள் (காண்க நாட்குறிப்பு #975).

தமது செல்வத்தைப் பகிர்ந்தளிக்கக் கடவுள் உங்களை எந்த விதத்தில் அழைக்கிறார்.  கடவுளின் இரக்கத்தைப் பெற யாருக்கும் தகுதியில்லை; அதனால்தான் அது இரக்கம் எனப்படுகிறது.  ஆனால் இந்த அருளை நிறைவாகச் சுவைக்க அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.  தமது இறை இரக்கத்தைப் பகிர்ந்தளிப்பவராக உங்களைப் பயன்படுத்த ஆண்டவர் விரும்புகிறார்.  அவர் தமது விருப்பப்படி உங்களைப் பயன்படுத்த அனுமதிக்க நீங்கள் தயாராகவும் விருப்பமுள்ளவராகவும் இருந்தால் போதும்.  நீங்கள் உங்களாகவே செயல்படப் போவதில்லை; மாறாக, கடவுள் உங்கள் வழியாகச் செயல்படுவார்.  ஆனால் நீங்கள் அவரை அனுமதித்தால் மட்டுமே அவரால் செயல்பட முடியும்.

ஆண்டவரே, உமது இறை இரக்கமாகிய எல்லையற்ற கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.  இந்த அருளைப் பகிர்ந்தளிப்பவராக நான் அழைக்கப்பட்டிருப்பதற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன்.  எல்லாவற்றிலும் உமக்கு “ஆம்” என்று சொல்லவும், நீர் எனக்கு அளித்துள்ள பொறுப்பை மனமுவந்து ஏற்கவும் எனக்கு உதவியருளும்.  அன்பு ஆண்டவரே, உமது விருப்பப்படி என்னைப் பயன்படுத்தும்; மிகுந்த தேவையில் இருக்கும் உலகிற்கு உமது இறை இரக்கத்தைத் தாராளமாகப் பகிர்ந்தளிப்பவராக இருக்க எனக்குத் தேவையான ஞானத்தையும் துணிவையும் தந்தருளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

ஜூலை 4 – சுதந்திர நாள்—அமெரிக்காவில் விருப்ப நினைவு

போர்த்துக்கல் நாட்டுப் புனித எலிசபெத்—விருப்ப நினைவு
(அமெரிக்காவில் ஜூலை 5 அன்று கொண்டாடப்படுகிறது)

இறை இரக்கம் பற்றிய மேலும் பல சிந்தனைகள்

தினசரி நற்செய்திச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்