சிந்தனை 322: ஆணவம் என்னும் தடை
ஆண்டவர் தமது அளவற்ற இரக்கத்தால் இரவும் பகலும் உங்களிடம் வருகிறார்; உங்கள் ஆன்மா அவருக்குத் திறந்திருக்கும்போது மகிழ்ச்சியுடன் அதனுள் நுழைகிறார். மிகப் பெரிய போராட்டங்கள்கூட நம் ஆண்டவர் உங்களிடம் வருவதைத் தடுப்பதில்லை. ஆனால் குறிப்பாக ஒன்று நம் ஆண்டவரை விலக்கி வைக்கிறது. அதுதான் ஆணவம். ஆணவமே எல்லாப் பாவங்களுக்கும் தாய்…