தமிழ்

சிந்தனை 319: தனிமையுணர்வை எதிர்கொள்ளுதல்

தனிமையுணர்வு என்பது பலர் அனுபவிக்கும் ஆழ்ந்த துயரம்.  அது இவ்வளவு வேதனை தருவதற்கான ஒரு காரணம் இதுதான்: தனிமையில் இருப்பவர் தமது வேதனையைத் தணிக்க உதவ யாருமின்றி, அல்லது மிகச் சிலரே உள்ள நிலையில், தனியாகவே துன்புறுகிறார் என்பது வெளிப்படை.  நிலைமை இவ்வாறு இல்லையென்றால், அவர் தனிமையை உணர மாட்டார்.  வியப்புக்குரிய வகையில், மற்றவர்கள் சூழ்ந்திருப்பவர்கள்கூட..

சிந்தனை 314: வலிமையான பாதுகாப்பாக விளங்கும் இரக்கம்

ஒரு படை முற்றுகையிடப்படும்போது, தன்னைத் தற்காத்துக்கொள்ளக்கூடிய இடத்தைத் தேடுகிறது.  உயரமான நிலப்பகுதியையோ, அடைக்கலமும் பாதுகாப்பும் அளிக்கும் இடத்தையோ உடனடியாகத் தேடுகிறது.  உங்கள் ஆன்மிக வாழ்விலும் அவ்வாறே இருக்க வேண்டும்.  தீயோனின் அம்புகளால் நீங்கள் தாக்கப்படும்போது, அல்லது வாழ்க்கை…

சிந்தனை 282: துன்பம், துன்புறுத்தல், கொடுமை மற்றும் அவமானம்

இந்தத் தலைப்பு பார்த்தவுடனே உங்களைக் கவர்வதாகத் தோன்றாமல் இருக்கலாம்.  இவற்றையெல்லாம் தாங்கிக்கொள்ள யார்தான் விரும்புவார்கள்?  ஆனால் இயேசு இவை அனைத்தையும் மிகக் கடுமையான அளவில் தாங்கிக்கொண்டார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  இயேசு மகிழ்ச்சியாக இருந்தாரா?  அவரது ஆன்மா அமைதியில் இருந்ததா?  நிச்சயமாக.  இது வெளிப்படுத்துவது…

சிந்தனை 277: பதற்றத்தை அகற்றும் இரக்கம்

பதற்றம் பெரும்பாலும் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கிறது. சிலர் தங்கள் அன்றாட வாழ்வில் மிகுந்த பதற்றத்தையும் விரக்தியையும், கடுமையான கோபத்தையும்கூட எதிர்கொள்கிறார்கள். தொடக்கத்தில், மற்றொருவரின் கோபம் உங்களை எச்சரிக்கை அடையச் செய்து, அச்சத்திற்கு இடமளிக்கத் தூண்டலாம். இது இயல்பான எதிர்வினையே. மற்றொருவரின் கோபம் உங்களையும் எதிர்வினையாற்றத் தூண்டலாம்…

சிந்தனை 268: மரணத்தைப் பற்றிச் சிந்தித்தல்

உங்கள் மரணத்தைப் பற்றி நினைப்பது அச்சமூட்டுவதாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் அதைப் பற்றி அடிக்கடி சிந்திப்பதில்லை. ஆனால், ஒருவர் தமது மரணத்தை நேரடியாகவும் முழு நம்பிக்கையுடனும் நோக்க முடிவது ஓர் அருளாகும். உங்கள் வாழ்வு சீராக இருந்தால் மட்டுமே இவ்வாறு முழு நம்பிக்கையுடன் நோக்க முடியும்…

சிந்தனை 263: புயலில் உங்கள் சுக்கானை இயக்கும் கடவுள்

நீங்கள் ஒரு சிறு குழந்தையாக, நடுக்கடலில் ஒரு சிறிய படகில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.  புயல் வீசத் தொடங்குகிறது; எந்தத் திசையிலும் உங்களுக்குக் கரை தெரியவில்லை.  அலைகள் மோதும் ஒவ்வொரு முறையும் படகின் முன்பகுதியை மூழ்கடிக்கின்றன; அவற்றால் அலைக்கழிக்கப்படும் நீங்கள், எப்படிப் பிழைக்கப்போகிறீர்கள் என்று எண்ணுகிறீர்கள்.  இப்போது உங்கள் அப்பா…

சிந்தனை 233: மௌனத்தின் பதில்

சில வேளைகளில், வாழ்வில் நாம் அனுபவிப்பவற்றைப் பற்றி இறைவனிடம் மனம் திறந்து, முழுமையாகப் பேசுவது உதவியாக இருக்கலாம்.  பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு ஏற்படலாம்.  இறைவனும் செவிகொடுப்பார்…

சிந்தனை 232: புயலை அமைதிப்படுத்துதல்

இயேசு புயலை அமைதிப்படுத்திய நிகழ்வை நினைவுகூருங்கள் (மத்தேயு 8:23-27).  வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சவால்களின்போது அவர் உங்களுக்கு அமைதியை அளிப்பார் என்பதற்கான இறைவாக்கு அடையாளமாக இந்த அற்புதச் செயல் நிகழ்த்தப்பட்டது…

சிந்தனை 207: கிறிஸ்துவின் திருஇதயத்தில் ஆறுதல் பெறுதல்

அன்பும் கனிவும் மிக்க பெற்றோரிடம் நெருங்கி அணைந்துகொள்வதில் குழந்தைகள் பெரும்பாலும் மிகுந்த ஆறுதல் அடைகிறார்கள்.  இந்த அன்புக் கரங்கள் இறுக அணைத்துக்கொள்ளும்போது ஆழ்ந்த நிறைவு கிடைக்கிறது.  இத்தகைய தருணங்களில் அச்சமும் கவலையும் அகல்கின்றன; துயரம் இருந்த இடத்தில் அமைதியும் ஆறுதலும் மீண்டும் மலர்கின்றன.  அவ்வாறே இருக்க வேண்டும்…

சிந்தனை 205: அமைதியின் கோட்டை

ஆண்டவரின் அமைதி ஒரு கோட்டையைப் போன்றது. தீயவனிடமிருந்து வரும் வெளிப்புறத் தாக்குதல்கள் அனைத்திலிருந்தும் தப்பிக்க நாம் அதில் புகலிடம் அடைய வேண்டும்.  இந்தக் கோட்டைக்கு வெளியே, இத்தகைய தீங்குநிறைந்த தாக்குதல்கள் அனைத்திற்கும் நாம் ஆளாகிறோம்.  கடவுளின் அமைதி அளிக்கும் புனித…