தமிழ்

சிந்தனை 319: தனிமையுணர்வை எதிர்கொள்ளுதல்

தனிமையுணர்வு என்பது பலர் அனுபவிக்கும் ஆழ்ந்த துயரம்.  அது இவ்வளவு வேதனை தருவதற்கான ஒரு காரணம் இதுதான்: தனிமையில் இருப்பவர் தமது வேதனையைத் தணிக்க உதவ யாருமின்றி, அல்லது மிகச் சிலரே உள்ள நிலையில், தனியாகவே துன்புறுகிறார் என்பது வெளிப்படை.  நிலைமை இவ்வாறு இல்லையென்றால், அவர் தனிமையை உணர மாட்டார்.  வியப்புக்குரிய வகையில், மற்றவர்கள் சூழ்ந்திருப்பவர்கள்கூட..

சிந்தனை 309: பிறருடன் உரையாடுதல்

நாம் மற்றொருவருடன் உரையாடும்போதெல்லாம், கடவுளின் அன்பைப் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. சாதாரண உரையாடலில்கூட அதற்கான வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, மற்றொருவர் தம் வாழ்க்கை விவரங்களைச் சொல்லும்போது கூர்ந்து கேட்பது, அவர்மீது உங்களுக்குள்ள அக்கறையையும் கரிசனையையும் வெளிப்படுத்துகிறது; அவருடைய மாண்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதையும் காட்டுகிறது…

சிந்தனை 300: உங்கள் ஆன்மாவின் இரகசியங்களை வெளிப்படுத்துதல்

உங்கள் ஆன்மாவின் ஆழங்களை வெளிப்படுத்தக்கூடிய ஒருவர் இருப்பது உண்மையிலேயே மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. முழுமையான இரகசியக் காப்பும், இரக்கமும், புரிதலும் கிடைக்கும்போது, இவ்வாறு நம்பிக்கைக்குரிய ஒருவர் இருப்பது ஒரு பெரும் ஆசீர்வாதமாகும். உங்கள் பாவங்களைக்கூடத் தயக்கமின்றிப் பகிர்ந்துகொள்வது…

சிந்தனை 289: ஆன்மாக்களுக்கான ஏக்கம்

உங்கள் இதயத்தின் ஆசையை உற்றுநோக்கும்போது, எது மிகவும் மேலோங்கி நிற்கிறது?  நிச்சயமாக உங்களை ஈர்க்கும் பல விஷயங்கள் உள்ளன.  உலகம் தரும் பல வெகுமதிகளும் இன்பங்களும் உங்கள் ஏக்கங்களை எளிதில் ஆக்கிரமித்துக்கொள்ளலாம்.  உடல் இன்பம், பணம், உலக வெற்றி ஆகியவற்றுக்கான ஆசை, மிக வலுவான ஆசைகளில் ஒன்றாக இருப்பது பலருக்கு…

சிந்தனை 269: இரக்கத்தையும் அவலநிலையையும் ஒருசேர உற்றுநோக்குதல்

உற்றுநோக்குவதற்கு இரண்டு விடயங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடிந்தால், அவை எவையாக இருக்கும்?  உண்மையில், உற்றுநோக்குவதற்கு மிகச் சிறந்த இரு விடயங்கள் கடவுளின் இரக்கமும் உங்கள் சொந்த அவலநிலையுமே.  கடவுளின் இரக்கம் உற்றுநோக்க வேண்டிய மிக முக்கியமான விடயங்களில் ஒன்று என்பது பெரும்பாலும் உடனடியாகவே புரியும்…

சிந்தனை 261: பிறரில் மறைந்திருக்கும் இயேசு

இயேசு வறுமையிலும் பசியிலும் குளிரிலும் வாடியவராக உங்களிடம் வந்து, தம்மைக் கவனித்துக்கொள்ளும்படி கேட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.  இந்த அனுபவம் உங்களைத் திடுக்கிடச் செய்து, இவர் உண்மையிலேயே இயேசுதானா என்று கேள்வி எழுப்பக்கூடும்.  ஆனால், அவர் இயேசுதான்.  தேவையில் இருக்கும் மனிதர் வழியாக இயேசு ஒவ்வொரு நாளும் நம்மிடம் வருகிறார்.  ஒருவேளை…

சிந்தனை 247: தேவைகள் உள்ளவர்கள் தரும் ஆசீர்வாதம்

உங்கள் குடும்பத்தில் ஒருவர் கடுமையாக நோயுற்றிருந்தால், அல்லது சிறையில் இருந்தால், அல்லது ஏதேனும் பெரிய தேவையில் இருந்தால், அது உங்களுக்கு ஒரு சுமையாக இருக்குமா, அல்லது ஆசீர்வாதமாக இருக்குமா?  இதைப் பற்றிச் சிந்தியுங்கள்.  சிறப்புக் கவனிப்பு தேவைப்படுவோர் உங்கள் வாழ்க்கையை மேலும் கடினமாக்குகிறார்களா?  இந்தக் கேள்விக்கு முற்றிலும் நடைமுறைக் கண்ணோட்டத்தில் பதிலளித்தால், அதற்கான பதில்…

சிந்தனை 239: இரக்கத்தின் முத்திரை

ஒவ்வொரு மாபெரும் புனிதரும் கடவுளின் நன்மைத்தனத்தின் ஏதோ ஓர் அம்சத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். சிலர் உலகச் செல்வங்களின்மீது சிறிதும் பற்றின்றி வாழ்கிறார்கள்; சிலர் தளராத அர்ப்பணிப்புடன் ஏழைகளுக்குப் பணிபுரிகிறார்கள்; சிலர் ஆழ்ந்த செப வாழ்வு வாழ்கிறார்கள்; சிலர் மறைஞான வெளிப்பாடுகளைப் பெறுகிறார்கள்; சிலர் பல தொகுதிகளாக எழுதுகிறார்கள்…

சிந்தனை 226: இரக்கத்தின் நற்கனி

நம் ஆண்டவரின் இதயம் பிறர்மீது நிறைவான இரக்கம் கொண்டிருந்தது. அவரது இரக்கம் ஒரு பொதுவான கருத்து மட்டுமல்ல; மாறாக, அது தெளிவான செயல்களில் வெளிப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்வது முக்கியம்…

சிந்தனை 220: வேதனையில் வாடும் ஆன்மா

சிலர் தங்கள் ஆன்மாவின் ஆழத்தில் கடுமையான வேதனையை உணர்கிறார்கள். சில வேளைகளில் பாவம் இதற்குக் காரணமாகிறது; வேறு சில வேளைகளில், இயேசு அனுபவித்த துன்பங்களை ஆன்மா அனுபவிக்கச் செய்யும் கடவுளின் சிறப்பான இரக்கம் இதற்குக் காரணமாகிறது. எதுவாக இருந்தாலும், நீங்கள் எதிர்கொண்டால்…