தமிழ்

சிந்தனை 81: வல்லமையும் இரக்கமும்

முழு அதிகாரம் கொண்ட ஒரு நாட்டின் சர்வாதிகாரியைக் கற்பனை செய்து பாருங்கள். அவர் மிகுந்த கோபமும், தீய எண்ணமும், பழிவாங்கும் குணமும் கொண்டவர். இப்படிப்பட்ட ஒருவரைக் கோபப்படுத்த நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இப்போது இதற்கு நேர்மாறான ஒருவரைக் கற்பனை செய்து பாருங்கள். முழு அதிகாரம் கொண்ட அவருக்கு அருளப்பெற்ற இதயமோ தூய…

சிந்தனை 79: நம் பேறுபெற்ற வியாகுல அன்னை

அன்னை மரியா தம் வாழ்வில் எவ்வளவோ துன்பங்களைத் தாங்கிக்கொண்டார்.  தம் மீட்பரை அற்புதமாகக் கருத்தரித்தபோது, பிறரது சந்தேகங்களையும் ஏளனத்தையும் தாங்கிக்கொண்டார்.  தம் இறைமகன் புறக்கணிக்கப்பட்டதையும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதையும் நிறைவான தாயன்புடன் கண்டார்.  அவரது மரண வேதனையிலும் இறப்பிலும் அவருக்குத் துணை நின்றார்.  இவை அனைத்தின் ஊடாகவும்…

சிந்தனை 17: செபத்தில் நம் புனித அன்னையை நாடுங்கள்

நம்பிக்கையுடன் செபத்தில் நம் புனித அன்னையை நாடுங்கள். அவர் உங்களைத் தமது மாசற்ற திருஇதயத்திற்கு அருகில் அணைத்துக்கொண்டு, தம் மகனாகிய இயேசுவிடம் வழிநடத்துவார். அவரே நிறைவான அன்னை, அனைத்து அருள்களின் அன்னை. அவரது தாயன்பு நிறைந்த பராமரிப்பிலும் பரிந்துரையிலும் நம்பிக்கை வையுங்கள். அருள்களைத் திறந்து வழங்குவது எப்படி என்பதை அவர் அறிவார்…

சிந்தனை 4: மனிதராதலும் பிறப்பும்

நித்திய இறைமகன் புனித கன்னி மரியாவின் திருவயிற்றில் மனித உடலை ஏற்றபோது, மனித இயல்பு என்றென்றைக்குமாக மாற்றம் பெற்றது. மனிதகுலத்துடன் தம்மை ஒன்றிணைத்ததன் வழியாக, கடவுள் நமது மாண்பை முற்றிலும் புதியதொரு நிலைக்கு உயர்த்தினார்…