தமிழ்

சிந்தனை 302: சிறந்த, வலிமைமிக்க, கூர்மையான அறிவாற்றல்

நமது மனம் கடவுள் அளித்த கொடை; நாம் அவரது உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் காட்டும் இரு முதன்மையான அம்சங்களில் இதுவும் ஒன்று.  மற்றொன்று, நமக்கு அளிக்கப்பட்ட சுதந்திர விருப்பம் என்னும் கொடை.  அறிவாற்றல் ஓர் அற்புதமான கொடை; அதைக் கடவுளின் பணிக்காக அர்ப்பணிக்க வேண்டும்.  நம் ஆண்டவர் நமது மனதை…

சிந்தனை 260: சிறிய அன்புச் செயல்களின் அளப்பரிய மகத்துவம்

இந்த உலகில் வியப்புக்குரிய செயல்களைச் செய்ய விரும்புகிறீர்களா? சில வேளைகளில் உங்களுக்குப் பிரம்மாண்டமான எண்ணங்களும் கனவுகளும் தோன்றுகின்றனவா? சில வேளைகளில் செல்வத்தையும் புகழையும் பற்றிய உலகியல் கனவுகள் நம்மிடம் மேலோங்குகின்றன; வேறு சில வேளைகளில் கடவுளுக்காகவும் திருஅவைக்காகவும் அசாதாரணமான செயல்களைச் செய்ய வேண்டும் என்ற கனவுகள் நமக்கு இருக்கலாம். ஆனால் இவை கனவுகளாகவே இருக்க வேண்டியதில்லை…

சிந்தனை 254: இறைமயமாதல்

நம் வாழ்வின் அழைப்பை இறைமயமாவதற்கான அழைப்பு என்று விவரிக்கலாம்.  இதன் பொருள் என்ன?  நம்மைத் தமது வாழ்விற்குள்ளேயே ஈர்த்துக்கொள்வதற்காகக் கடவுள் மண்ணுலகிற்கு வந்து, நமது மனித இயல்பை ஏற்றுக்கொண்டார் என்பதே இதன் பொருள்.  ஒரு வகையில், நாம் கடவுளாகும்படி அழைக்கப்படுகிறோம்.  “இறைமயமாதல்” என்னும் இக்கருத்து…

சிந்தனை 244: உலக முடிவுவரை பணியாற்றுதல்

கடவுளின் செயல்களைப் பரப்புவதற்காக நீங்கள் இரவும் பகலும் உழைக்கிறீர்கள் என்றால், அது நல்லதே. கடவுளின் திருவுளத்திற்குப் பணிசெய்யவும் அவருடைய இறை இரக்கத்தைப் பரப்பவும் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பிலிருந்து நல்ல கனிகள் விளையும். ஆனால், உலக முடிவுவரை தமது இரக்கத்தைப் பரப்பக் கடவுள் நம்மைப் பயன்படுத்த முடியும் என்பதையும் நாம் உணர வேண்டும். எப்படி? மட்டுமே…

சிந்தனை 229: அன்றாட மறைசாட்சியம்

தொடக்கத் திருஅவையின் தந்தையருள் ஒருவரான தெர்த்தூலியன், “மறைசாட்சிகளின் இரத்தமே திருஅவையின் விதை” என்று கூறினார். விசுவாசத்திற்காக ஒருவர் தம் இரத்தத்தைச் சிந்துவது, இறுதியில் ஒரு துயர நிகழ்வு அல்ல என்பதே இதன் பொருள்…

சிந்தனை 216: உண்மையான அன்பின் வழியாக மனத்தெளிவு

இறையருளால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய பல போதனைகளை நம் திருஅவை நம்முன் வைக்கிறது.  சில போதனைகள் ஒழுக்கநெறியைப் பற்றியவை; அவை உயர்ந்த நற்பண்புகள் நிறைந்த வாழ்வுக்கு நம்மை அழைக்கின்றன.  சில போதனைகள் கடவுளைப் பற்றியும், அவரது இருப்பையும் சாராம்சத்தையும் பற்றியவை.  சில போதனைகள் மனிதகுலத்தைப் பற்றியவை; நாம் யார்…

சிந்தனை 213: மெய்யுணர்வு என்னும் ஆன்மிகக் கொடை

கடவுளின் மறையுண்மைகளை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா?  நம் திருஅவையின் விசுவாசத்தைப் பல ஆண்டுகளாகக் கற்றறிந்த ஓர் இறையியலாளராக நீங்கள் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.  நம் திருஅவையின் இறையியல் துறைகள் அனைத்தையும் பற்றிய அறிவு, இவற்றைக் குறித்த உண்மையான புரிதலை உங்களுக்குக் கட்டாயம் அளிக்குமா…

சிந்தனை 199: இயேசுவோடு ஒன்றித்திருப்பது பிறரோடு ஒன்றித்திருப்பதே

திருஅவை பல காரணங்களால் மகிமைமிக்கதாக விளங்குகிறது.  அதனுள் காணப்படும் ஒற்றுமை, திருஅவையின் மகிமைமிக்க அம்சங்களில் ஒன்றாகும்.  சில வேளைகளில் அதனுள் மிகுந்த ஒற்றுமையின்மையும், மனக்காயங்களும், எல்லாவிதமான சீர்கேடுகளும் இருப்பது உண்மைதான்.  ஆனால் இவை திருஅவையின் பண்புகள் அல்ல.  இவை பாவங்களின் விளைவுகளே…

சிந்தனை 178: நம் சொந்த முயற்சியால் மட்டுமே புனிதத்தை ஒருபோதும் அடைய முடியாது

வாழ்வில் புனிதத்தை அடைய விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் சொந்த முயற்சியால் மட்டும் அதை அடைய முடியாது. உங்களுக்கு மற்றொருவரின் உதவி தேவை; ஏன், பலருடைய உதவியும் தேவை. பிறருடைய அன்பான கரங்களால் நாம் வழிநடத்தப்பட ஆண்டவர் நமக்குப் பல வழிகளைத் தந்துள்ளார். சிலருக்குக் கிடைத்துள்ள ஆன்மிக வழிகாட்டி பல…

சிந்தனை 177:  புனிதமான கீழ்ப்படிதல்

கடவுளின் திருவுளத்திற்குப் பதிலாக நமது சொந்த விருப்பத்தின்படி செயல்படுவதிலிருந்து நம்மைக் காக்கும் மிகச் சிறந்த பாதுகாப்புகளில் ஒன்று புனிதமான கீழ்ப்படிதல். துறவற வாழ்வில் இருப்பவர்கள் இதை நேரடியாகவும் வெளிப்படையாகவும் வாழும் பேறு பெற்றவர்கள். வெளிப்புறமான இந்த நடைமுறை தங்கள் உள்ளத்திலும் வேரூன்ற அனுமதிப்பதன் வழியாக, தாங்கள் வாழ்வது…