தமிழ்

சிந்தனை 330: பிறருக்காகச் செபித்தல்

உங்கள் செபங்களின் வல்லமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.  இறை இரக்கத்தில் நீங்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வளவு ஆழமானதோ, அவ்வளவு வல்லமையுள்ளதாக உங்கள் செபங்கள் அவை தேவைப்படுவோருக்கு அமையும்.  ஆண்டவர் அனைத்தையும் அறிவார்; யாருக்கு என்ன தேவை என்பதையும் அவர் அறிவார்.  ஆனால், அவர் தமது அருளை வழங்க விரும்புவது…

சிந்தனை 313: உறக்கமற்ற இரவுகள்

சிலர் ஒவ்வோர் இரவும் எளிதில் உறங்கி, காலைவரை தொடர்ந்து உறங்குகிறார்கள்.  வேறு சிலரோ உறங்குவதற்குப் பெரிதும் போராடுகிறார்கள்; இது அவர்களுக்குப் பெரும் சுமையாகவும் மனச்சோர்வுக்குக் காரணமாகவும் ஆகிவிடுகிறது.  நீங்கள் அடிக்கடியோ, எப்போதாவது அரிதாகவோ உறங்குவதற்குப் போராடுபவராக இருந்தால், பாருங்கள்…

சிந்தனை 312: உண்மையும் பிரமாணிக்கமும் உள்ள நண்பர்கள்

துன்புறும் ஒருவருடன் நட்பில் நிலைத்திருப்பது கடினம்; குறிப்பாக, அந்தத் துன்பம் நீடிக்கும்போது அது இன்னும் கடினம்.  ஓர் ஆன்மா ஏதேனும் நோயினாலோ வேறு இடரினாலோ துன்புறும்போது, தொடக்கத்தில் பெரும்பாலும் பல நண்பர்கள் உதவ வருகிறார்கள்.  ஆனால் காலம் செல்லச் செல்ல, தங்கள் அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து அளிக்கும் நண்பர்களின் எண்ணிக்கை குறைகிறது.  இது…

சிந்தனை 297: இயற்கை கற்றுத்தரும் பாடங்கள்

படைப்பு அனைத்தும் கடவுளின் மாட்சியையும் செயல்களையும் பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்டது.  பிரபஞ்சத்தின் அனைத்து விதிகளையும் ஒழுங்குபடுத்தி, அனைத்தையும் நிறைவாக வழிநடத்தும் ஞானமாகக் கடவுள் திகழ்கிறார்.  இயற்கையின் விதிகள் பிரதிபலிக்கும் அருளின் விதிகளை உணர்ந்துகொள்ள, இயற்கையின் விதிகளைத் தியானிப்பதில் நாம் நேரம் செலவிட்டாலே போதும்.  எடுத்துக்காட்டாக…

சிந்தனை 288: கேலிக்கு முன் மௌனம்

ஆழ்ந்த நம்பிக்கை என்னும் மகிமைமிக்க கொடை உங்களுக்கு வழங்கப்பட்டால், பலர் அதைக் கண்டு மகிழ்வார்கள். ஆனால் சிலருக்குப் பொறாமை ஏற்பட அது ஒரு சந்தர்ப்பமாக அமையலாம். இது வருத்தமும் வேதனையும் தரும் அனுபவம். மற்றொருவரின் பொறாமைக்குக் காரணம் நீங்களோ உங்கள் நம்பிக்கையோ அல்ல, அவருடைய பாவமே என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆகவே, நீங்கள் அனுபவித்தால்…

சிந்தனை 257: கடவுளின் நீண்டகாலத் திட்டம்

நம் ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடு பணிபுரிய நீங்கள் நாடும்போது, ஒவ்வொரு நாளும் தமது திருவுளத்தைப் பற்றி அவர் உங்களிடம் பேசுவதை உணரலாம். அது முற்றிலும் தெளிவாக இல்லாவிட்டாலும், உங்களிடமிருந்து அவர் இதை அல்லது அதை விரும்புகிறார் என்ற ஓர் உணர்வு உங்களுக்கு இருக்கலாம். கடவுள் உங்கள் வாழ்வுக்காக வைத்திருக்கும் திட்டத்தைப் பொதுவாக உங்களுக்கு முழுவதுமாக வெளிப்படுத்துவதில்லை…

சிந்தனை 256: உங்களால் இயன்றதைச் சிறப்பாகச் செய்தல்

இறைவன் நம்மிடம் கேட்பது வெற்றி பெறுவதையல்ல, உண்மையுடன் இருப்பதையே என்று புனித அன்னை தெரேசா கூறியது அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆண்டவரின் புனிதத் திருவுளத்திற்கு உண்மையுடன் இருக்க முயன்று, நம்மால் இயன்ற மிகச் சிறந்ததை அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு, மீதியை அவரிடம் விட்டுவிட நாம் அழைக்கப்படுகிறோம்.  சில வேளைகளில், நம்மால் இயன்ற “மிகச் சிறந்ததை” செய்தாலும், அது நாம் விரும்பும் நல்ல கனியைத் தராததுபோல் தோன்றலாம்…

சிந்தனை 254: இறைமயமாதல்

நம் வாழ்வின் அழைப்பை இறைமயமாவதற்கான அழைப்பு என்று விவரிக்கலாம்.  இதன் பொருள் என்ன?  நம்மைத் தமது வாழ்விற்குள்ளேயே ஈர்த்துக்கொள்வதற்காகக் கடவுள் மண்ணுலகிற்கு வந்து, நமது மனித இயல்பை ஏற்றுக்கொண்டார் என்பதே இதன் பொருள்.  ஒரு வகையில், நாம் கடவுளாகும்படி அழைக்கப்படுகிறோம்.  “இறைமயமாதல்” என்னும் இக்கருத்து…

சிந்தனை 239: இரக்கத்தின் முத்திரை

ஒவ்வொரு மாபெரும் புனிதரும் கடவுளின் நன்மைத்தனத்தின் ஏதோ ஓர் அம்சத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். சிலர் உலகச் செல்வங்களின்மீது சிறிதும் பற்றின்றி வாழ்கிறார்கள்; சிலர் தளராத அர்ப்பணிப்புடன் ஏழைகளுக்குப் பணிபுரிகிறார்கள்; சிலர் ஆழ்ந்த செப வாழ்வு வாழ்கிறார்கள்; சிலர் மறைஞான வெளிப்பாடுகளைப் பெறுகிறார்கள்; சிலர் பல தொகுதிகளாக எழுதுகிறார்கள்…

சிந்தனை 238: இருளான காலங்களில் பிரமாணிக்கம்

புனித ஃபவுஸ்தீனாவும் பிற மாபெரும் புனிதர்கள் பலரும், சிலுவை புனித யோவான் “ஆன்மாவின் இருண்ட இரவு” என்றும் “ஆவியின் இருண்ட இரவு” என்றும் வரையறுத்த ஒரு தனித்துவமான ஆன்மிக இருளுக்குள் நுழைந்திருந்தாலும், நாம் அனைவரும் ஏதோ ஒரு வடிவிலோ அல்லது…