தமிழ்

சிந்தனை 151: ஆன்மிக உறவு

மற்றொருவருடன் உண்மையாகவே நெருக்கமாக இருப்பதற்கும், அவரை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதும் உங்கள் மனதிலும் இதயத்திலும் உள்ள ஒவ்வொன்றையும் பகிர்ந்துகொள்வதும் அவசியமா? இருவரின் ஆன்மாக்களும் கடவுளுடன் நெருக்கமாக இணைந்திருந்தால், அது அவசியமில்லை. அத்தகைய நிலையில், ஒவ்வொருவரும் தாங்கள் பகிர்ந்துகொள்ளும்…

சிந்தனை 148: உத்தரிப்பிடத்தில் இருப்போருக்கான இரக்கம்

நம் அன்புக்குரிய ஒருவர் இறக்கும்போது, அவர் விண்ணகத்தில் இருக்கிறார் என்றும், இனி அவருக்கு நம் செபங்கள் தேவையில்லை என்றும் உடனடியாகக் கருதிவிடுவது எளிது. ஆனால் நமக்கு முன்பே இறந்துவிட்டவர்களுக்கு நாம் வழங்கக்கூடிய மிகச் சிறந்த கொடைகளில் ஒன்று நமது செபங்களே. அருள் நிலையில் இறக்கும் ஒவ்வொருவரும்…

சிந்தனை 142: ஆண்டவரின் அமைதி தீமையை விரட்டியடிக்கிறது

தீயவனாகிய சாத்தான் இருப்பதை ஏற்றுக்கொள்வது முக்கியம். அவனது கோபத்தையும் வெறுப்பையும் உணர்ந்துகொள்வதும் முக்கியம். அவனது வெறுப்பின் தீவிரம் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது. நம்மை வெறுப்பதையும், தன் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி நம்மை அழிக்க முயல்வதையும் அவனால் நிறுத்திக்கொள்ள இயலாது. இதை அறிவது ஏன்…

சிந்தனை 141: வானதூதர்களின் இரக்கம்

வானதூதர் படைகள் என்னும் கொடையை விண்ணகத்தில்தான் நாம் புரிந்துகொள்வோம். மாட்சிமைமிக்க இந்த ஆவிக்குரிய உயிர்களை இறைவன் அன்பினால் படைத்தார். அதிபுனித மூவொரு இறைவனை என்றென்றும் வழிபட்டு ஆராதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சிலர் படைக்கப்பட்டனர். இந்த அழைப்பில் அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை; எப்போதும் மேலும்…

சிந்தனை 134: நமது கூட்டு உழைப்பின் இனிமை

ஒரு தேனீ நாள்தோறும் அயராது உழைக்கிறது; தேனீக் கூட்டத்திலுள்ள அனைத்துத் தேனீக்களும் ஒரே இயற்கையான நோக்கத்திற்காக உழைக்கின்றன.  அவை தேனை உற்பத்தி செய்வதற்காக உழைக்கின்றன.  இது எளிதான பணி அல்ல; சிறிதளவு தேனை உற்பத்தி செய்வதற்கே ஆயிரக்கணக்கான தேனீக்களின் இடைவிடாத உழைப்பு தேவைப்படுகிறது.  ஆனால், இறுதியில் அவற்றின் முயற்சிகள் பலனளிக்கின்றன…

சிந்தனை 132: புரிந்துகொள்ள இயலாத கடவுள்

அறிந்துகொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்கும் பொதுவாக உள்ள ஓர் இயல்பு. ஏறக்குறைய எல்லாவற்றையும் அறிந்துகொள்ள விரும்பி, நாம் எளிதில் ஆர்வம் கொள்கிறோம். இதழ்கள், செய்திக் கட்டுரைகள், நிகழ்ச்சிகள், அன்றாட வம்புப் பேச்சுகள் போன்ற அனைத்தும் நமது ஆர்வத்தை நிறைவுசெய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த ஆர்வம் கடவுளை அறிந்துகொள்ளும் ஆவலாகவும்…

சிந்தனை 129: அஞ்ச வேண்டாம்

“அஞ்சாதே; விசுவாசம் மட்டும் கொண்டிரு” (மாற்கு 5:36). “அஞ்சாதே” என்னும் இந்த நான்கு சொற்களும் மறைநூல் முழுவதிலும் எண்ணற்ற முறை சொல்லப்படுகின்றன. நாம் அவற்றுக்குச் செவிசாய்க்க வேண்டும். அச்சம் நம்மைச் செயலிழக்கச் செய்து, பலவிதமான அறிவற்ற சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் நம்மை இட்டுச் செல்லக்கூடும். அச்சத்தால் செயல்படுபவர்…

சிந்தனை 117: உங்கள் இதயத்தின் தனிமட வளாகம்

சில அருள்சகோதரிகளும் துறவிகளும் தனிமட வளாகத்தின் எல்லைக்குள் தனித்துறை வாழ்வு வாழ்கிறார்கள். அந்த இறைநம்பிக்கைச் சமூகத்தின் உறுப்பினர்களைத் தவிர, வேறு எவரும் தகுந்த காரணமின்றி அந்த வளாகத்திற்குள் நுழையக் கூடாது. மற்றவர்கள் மடத்தலைவரின் அனுமதியுடன் மட்டுமே உள்ளே செல்லலாம். ஒருவேளை…

சிந்தனை 115: கடவுளின் திருவுளம் உங்களைப் பாதுகாக்கும்

கடவுளின் திருவுளம் என்பது, உங்கள் எதிர்காலத்திற்காக அவர் வகுத்துள்ள திட்டத்தைவிட மிக மேலானது.  உங்களைக் குறித்து அவர் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும்விட மேலானது.  அவரது திருவுளமே நீங்கள் புனிதமடைவதற்கான பாதை; அதுவே மிகுந்த ஆறுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஊற்று.  அவரது திருவுளம் செயலாற்றுவதாகவும் செயலாற்றாததாகவும் (அனுமதிப்பதாகவும்) உள்ளது.  அது…

சிந்தனை 108: திருஅவையின் குரல்

இறைவன் பல உள்ளார்ந்த அருள்கள் மற்றும் தூண்டுதல்கள் உட்படப் பல்வேறு வழிகளில் புனிதர்களிடம் பேசியுள்ளார். ஆனால், புனிதத்தின் உச்சியில் வாழும் மிகச் சிறந்த இறையனுபவமுடையவரும்கூட, இறுதியில் இறைவன் தமது திருஅவையின் வழியாகப் பேசும் குரலுக்குப் பணிந்தாக வேண்டும். திருஅவை, குறிப்பாக…