தமிழ்

சிந்தனை 356: உங்கள் இதயத் துடிப்பு

உங்கள் வாழ்வில் உற்சாகம் ஏற்படும்போது, உங்கள் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்குகிறது. இது ஓர் இயல்பான எதிர்வினை. ஆகவே, உங்கள் இதயம் எப்போதாவது கடவுளுக்காகத் துடிக்கிறதா என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. கடவுளின் உடனிருப்பைக் குறித்த புனித வியப்பு உங்களை ஆட்கொள்ள அனுமதிக்கிறீர்களா? நீங்கள்…

சிந்தனை 355: வீண்பேச்சு, சோம்பியிருக்கும் ஆன்மாவின் அடையாளம்

சிலர் பிறரைப் பற்றிப் பேசுவதில் மிகவும் வல்லவர்கள். அவர்களைப் பற்றித் தொடர்ந்து கருத்துகளையும் தீர்ப்புகளையும் வழங்குகிறார்கள்; எல்லாவற்றையும் புரிந்துகொண்டவர்கள் போலத் தாராளமாகப் பேசுகிறார்கள். இவர்களைப் போல் நீங்களும் இருக்காதீர்கள். பிறருடைய செயல்களில் தங்கள் மனத்தையும் நாவையும் ஈடுபடுத்திக்கொண்டிருப்பவர்கள்…

சிந்தனை 354: பாவ வலையின் சிக்கல்களை அவிழ்த்தல்

ஒருவர் பொய் சொல்லத் தொடங்கி, அதையே பழக்கமாக்கிக்கொள்ளும்போது, இறுதியில் பொய்களின் வலையில் சிக்கிக்கொள்வார். ஒரு பொய் இன்னொரு பொய்க்கு வழிவகுக்கும்; விரைவிலேயே இந்த வலையிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் தவிப்பார். இங்குதான் நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும். கடுமையாக நடந்துகொள்வது மிகவும் எளிது…

சிந்தனை 353: மகிமைக் கீதம்

கடவுளின் படைப்பில் இயல்பாக அமைந்துள்ள ஒழுங்கையும் தாளலயத்தையும் சார்ந்து, அதன் இயற்கை விதிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதே இசை.  சில இசை, உலகியல் உண்மைகளை மகிமைப்படுத்துவதற்குப் படைப்பிலுள்ள இயற்கை ஒழுங்கைப் பயன்படுத்துகிறது.  சில இசை வடிவங்கள் பாவத்தையும் ஒழுங்கின்மையையும்கூட வெளிப்படுத்துகின்றன.  ஆனால்…

சிந்தனை 352: தண்டனையும் குற்றவுணர்வும்

கடவுளின் தண்டனையைப் பற்றிச் சிந்திப்பது இனிமையானதாக இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் அவரது தண்டனைகள் உண்மையானவை என்பதையும், அவை அவரது அளவற்ற இரக்கத்தின் செயல் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆன்மாக்கள் கடவுளிடமிருந்து விலகி, அவரது இரக்கத்தை மறுக்கும்போது, அது அவரது இதயத்தை ஆழமாகக் காயப்படுத்துகிறது.  இதன் விளைவாக, கடவுள்…

சிந்தனை 351: கடவுளை அறிவதா, அனுபவிப்பதா

கடவுளை அறிவதே உங்கள் இடையறாத இலக்காக இருக்க வேண்டும். திருவிவிலியத்தையும் திருஅவையின் போதனைகளையும் புனிதர்களின் வாழ்க்கையையும் படிப்பது இந்த முயற்சிக்கு உதவுகிறது. ஆனால் கடவுளை அறிவது வாழ்க்கையின் இறுதி இலக்கு அல்ல. அறிவு நம்பிக்கையிலிருந்து வருகிறது; நம்பிக்கையோ கடவுள் அளிக்கும் கொடை. ஆனால் முழுமையாக…

சிந்தனை 350: ஆராதனையில் அழகு

உலகம் அழகானது; அது கடவுளின் அழகை வெளிப்படுத்துகிறது. ஆனால் நற்கருணை போன்ற ஆன்மிக உண்மைகள் அதைவிடப் பன்மடங்கு அழகானவை.  மிகப் புனித நற்கருணையில் பிரசன்னமாக இருக்கும் கடவுளின் அழகைக் காண, உங்களுக்கு நம்பிக்கையின் கண்கள் தேவை.  இந்த அழகைக் காணும் உங்கள் பார்வையைக் கூர்மையாக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று ஆராதனை.  பெற்றுக்கொண்டாலும்…

சிந்தனை 349: உங்கள் இதய அமைதியை இழத்தல்

உங்கள் இதயத்தின் அமைதியையும் சாந்தத்தையும் பறிக்கும் ஆற்றல் எதற்கு உள்ளது? நீங்கள் அவமதிக்கப்பட்டால், கேலிக்கு உள்ளாக்கப்பட்டால், உங்களைப் பற்றித் தவறாகத் தீர்ப்பிடப்பட்டால், சிறையில் அடைக்கப்பட்டால், அடிக்கப்பட்டால் அல்லது கொல்லப்பட்டால்கூட என்ன ஆகும்? இவற்றில் ஏதேனும் உங்கள் இதயத்தில் உள்ள கடவுளின் அமைதியைப் பறித்துவிடுமா? நீங்கள் அனுமதித்தால் மட்டுமே அது நடக்கும். நீங்கள் அறிந்து நம்புவது இன்றியமையாதது…

சிந்தனை 348: கடவுள் தாம் வெளிப்படுத்துவதை நிறைவேற்றுகிறார்

இரண்டு உண்மைகளை அருகருகே வைத்துச் சிந்திப்பது வியப்பளிக்கிறது.  முதலாவதாக, ஒவ்வோர் ஆண்டும் உயிர்ப்புக் காலத்தின் இரண்டாம் ஞாயிறன்று இறை இரக்கப் பெருவிழா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட வேண்டுமென்று தாம் விரும்புவதாக இயேசு புனித ஃபவுஸ்தினாவிடம் மீண்டும் மீண்டும் கூறியதை அவர் கேட்டார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.  துறவுமடத்தின் தனிமையில் வாழ்ந்த இந்த எளிய அருட்சகோதரி இத்தகைய பணியை எவ்வாறு நிறைவேற்றுவார்…

சிந்தனை 347: நற்கருணை உட்கொள்ளுதல்

நற்கருணை உட்கொள்ளுதலைவிட மேலான கொடை இவ்வுலகில் இல்லை.  இருந்தும், சிதறுண்ட, கவனமற்ற உள்ளத்தோடு நாம் எத்தனையோ முறை இந்த அருளடையாளத்தை அணுகுகிறோம்.  இத்தகைய கவனச்சிதறலை வெல்ல, நற்கருணை உட்கொள்ளுதலின் மெய்ந்நிலை குறித்த ஆழமான உண்மைகளை முதலில் உங்கள் முழு மனத்தோடு உறுதியாக நம்ப வேண்டும்.  நீங்கள் பணிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்…