தமிழ்

சிந்தனை 318: அக்கறையின்மையும் மறதியும்

நீங்கள் திருமணமானவராக இருந்து, உங்கள் வாழ்க்கைத்துணையிடம் தொடர்ந்து அக்கறையின்றி நடந்துகொண்டால், அது ஒரு பிரச்சினையாக இருக்கும்.  அக்கறையின்மை என்பது மற்றவரின் நலனில் உண்மையான அக்கறை இல்லாதிருப்பதாகும்.  அக்கறை குறைவாக இருக்கும்போது எளிதில் மறந்துவிடுவதால், மறதி என்பது அக்கறையின்மையின் ஓர் அறிகுறியாகும்.  எடுத்துக்காட்டாக…

சிந்தனை 298: வீண் புறங்கூறல் என்னும் நச்சுக்கிருமி

பாவத்தால் வீழ்ச்சியடைந்த நமது மனித இயல்பிலுள்ள ஒரு வருந்தத்தக்க போக்கு, பிறரைப் பற்றிப் “புறங்கூறுவது” ஆகும்.  ஒருவர் தொடங்கியதும் அது மற்றவர்களிடம் விரைவாகப் பரவுவதால், அது ஒரு நச்சுக்கிருமியைப் போன்றது.  நீங்கள் உணர்வதற்குள்ளேயே, பலர் உண்மையின் அடிப்படையில்லாத வதந்திகளையும் கிசுகிசுக்களையும், அல்லது பிறரன்பின்றிச் சொல்லப்படும் உண்மைகளையும் பரப்பிக்கொண்டிருக்கலாம்.  இது…

சிந்தனை 296: பெற்றோரின் அன்பு

தம் பிள்ளையைத் தீவிரமான அன்புடன் நேசிக்கும் ஒரு தாயையோ தந்தையையோ கற்பனை செய்து பாருங்கள். தம் பிள்ளையின் பராமரிப்பிற்கும் நல்வாழ்விற்கும் அவர் எல்லா வகையிலும் தம்மை அர்ப்பணித்துக்கொள்கிறார். பிள்ளை பிறந்ததிலிருந்து வளர்ந்து பெரியவராகும் வரையிலும் அவரது அன்பு நிலையானதாகவும் மாறாததாகவும் இருக்கிறது. இப்போது, ஒரு கட்டத்தில் அவரது பிள்ளை அவரை விட்டு விலகிச் சென்றால், அவரது உள்ளத்தில் ஏற்படும் வேதனையைக் கற்பனை செய்து பாருங்கள்…

சிந்தனை 284: நிகழ்கணத்தில் வாழ்தல்

கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ வாழ்ந்துகொண்டு, நிகழ்கணத்தில் வாழத் தவறுவது பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான சோதனை. கடந்த கால நிகழ்வுகள், பாவங்கள், மனக்காயங்கள் போன்றவற்றின் கட்டுப்பாட்டிலேயே நீங்கள் இருக்கும்போது, கடந்த காலத்தில் வாழ்கிறீர்கள். அந்த…

சிந்தனை 199: இயேசுவோடு ஒன்றித்திருப்பது பிறரோடு ஒன்றித்திருப்பதே

திருஅவை பல காரணங்களால் மகிமைமிக்கதாக விளங்குகிறது.  அதனுள் காணப்படும் ஒற்றுமை, திருஅவையின் மகிமைமிக்க அம்சங்களில் ஒன்றாகும்.  சில வேளைகளில் அதனுள் மிகுந்த ஒற்றுமையின்மையும், மனக்காயங்களும், எல்லாவிதமான சீர்கேடுகளும் இருப்பது உண்மைதான்.  ஆனால் இவை திருஅவையின் பண்புகள் அல்ல.  இவை பாவங்களின் விளைவுகளே…

சிந்தனை 182: ஆணவத்தின் இரகசியங்களை ஊடுருவி அறியும் ஞானம்

ஆணவம் நம்மை முழுவதுமாக ஆட்கொள்ளக்கூடும்.  அப்போது நம்மைப் பற்றியும் நமது வேதனையைப் பற்றியும் மட்டுமே நாம் சிந்திக்கிறோம்.  ஒருவேளை இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கலாம்.  நீங்கள் மனக்காயமடைந்து, அந்தக் காயத்தையே நினைத்து மனம் குமுறிக்கொண்டிருக்கலாம்.  அது உங்கள் இதயத்தில் கசப்பை உருவாக்குகிறது; அந்தக் காயத்தைக் குணப்படுத்த நீங்கள் முயல்கிறீர்கள்.  ஆனால்…

சிந்தனை 109: கடவுளின் கரங்கள்

ஒரு குழந்தை பயப்படும்போது அல்லது காயமடையும்போது, இயல்பாகவே ஆறுதல் தேடும் இடம் தன் தாயின் அல்லது தந்தையின் கரங்கள்தான். அழும் குழந்தை முதலில் தேடுவது இதைத்தான். நாமும் அப்படியே இருக்க வேண்டும். நம் தேவைகளில், விண்ணகத் தந்தையின் கரங்களையும் நம் மீட்பராம் இயேசுவின் கரங்களையுமே நாடி ஓட வேண்டும். நாம்…

தியானம் 66: இரக்கத்தின் வழியாக நீதி

சிலர் நாள்தோறும் மற்றொருவரின் கடுமையையும் கொடுமையையும் அனுபவிக்கிறார்கள்.  இது மிகுந்த வேதனை தருகிறது.  இதனால், வேதனை ஏற்படுத்துபவர் தம் செயல்களுக்குப் பொறுப்பேற்கும்படி நீதி கிடைக்க வேண்டும் என்ற வலுவான விருப்பம் எழலாம்.  ஆனால் உண்மையான கேள்வி இதுதான்: ஆண்டவர் என்னை என்ன செய்ய அழைக்கிறார்?  நான் எவ்வாறு…

சிந்தனை 32: மன்னிப்பின் இரக்கம்

வாழ்நாள் முழுவதும் பிறருடைய பாவங்களால் நீங்கள் காயப்படுவீர்கள்.  இது தவிர்க்க முடியாதது.  இந்தக் காயத்தை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதே சிந்திக்க வேண்டிய உண்மையான கேள்வி.  அதை விடாமல் பற்றிக்கொண்டு, அதையே எண்ணிக் குமுறுவீர்களா?  அல்லது மன்னிப்பீர்களா?  ஆனால் மன்னிப்பது மட்டும் போதாது.  இறை இரக்கம் உங்கள் ஆன்மாவுக்குள் ஆழமாக நுழைய நீங்கள் அனுமதிக்க வேண்டும்…