சிந்தனை 180: இயேசுவின் திருப்பாடுகள்
நற்செய்திகளை நன்கு அறிந்தவர்களாகிய நாம், சில வேளைகளில், கிறிஸ்துவின் துன்பங்களைக் குறித்து ஒருவித அலட்சிய உணர்வுக்கு ஆளாகலாம். ஒவ்வோர் ஆண்டும் அவரது பாடுகளின் வரலாறு வாசிக்கப்படுவதைக் கேட்கிறோம்; அவரது பாடுகளைச் சித்தரிக்கும் பல படங்களையும் பார்த்திருக்கிறோம். இவ்வாறு அவை நமக்குப் பழகிப்போனதால், அவை ஏற்படுத்த வேண்டிய உரிய தாக்கத்தை ஏற்படுத்த நாம் இடமளிக்கத் தவறலாம்…