தமிழ்

சிந்தனை 286: தாழ்ச்சி, தூய்மை மற்றும் இறையன்பு

நம் அருள்மிகு அன்னையின் இதயத்திற்கு மிகவும் உகந்தது எது? அவர் உங்களுக்குத் தோன்றி, உங்களுக்காகத் தாம் கொண்டிருக்கும் மிகப்பெரிய விருப்பத்தைத் தெரிவித்தால், அது என்னவாக இருக்கும்? உங்கள் வாழ்வில் உள்ள ஒரு குறிப்பிட்ட தேவையைக் கடவுள் அவருக்கு அறியச் செய்திருக்கலாம். ஆனால், அதோடு கூட…

சிந்தனை 281: அசைக்க முடியாத இறைத்திருவுளம்

சில வேளைகளில், நாம் இறைவனை ஆழமாக அன்பு செய்யும்போது, அவருக்காகப் பெரிய செயல்களைச் செய்ய வேண்டும் என்ற வலுவான உந்துதல்கள் நமக்குள் எழுவதை உணரலாம்.  இருந்தாலும், நமது ஆவலும் உறுதியான தீர்மானமும் இருந்தபோதிலும், நமது பணி முன்னேற இறைவன் அனுமதிக்காததுபோல் தோன்றலாம்.  இதற்குக் காரணம் ஆண்டவர்…

சிந்தனை 279: உங்கள் உள்ளார்ந்த உறுதி

உங்கள் ஆன்மாவினுள் எழும் உள்ளார்ந்த உறுதியின் வழியாகக் கடவுள் உங்களிடம் பேசுவதைக் கேட்க நீங்கள் முயல வேண்டும்.  சில வேளைகளில் கடவுளின் குரல் உரக்கவும் தெளிவாகவும் இருப்பதாக நீங்கள் உணரலாம்; வேறு சில வேளைகளில் அது மெல்லியதாகவும் குழப்பமூட்டுவதாகவும் தோன்றலாம்.  கடவுளின் குரலோடு போட்டியிட்டு உங்கள் கவனத்தை ஈர்க்கக்கூடியவை பல உள்ளன…

சிந்தனை 273: உலகப் பற்றுகள் ஏதுமின்றி, கடவுள்மீதான அன்பு மட்டுமே

கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவின் உச்சநிலையில், மிகுந்த ஆர்வத்துடனும் தெளிவான நோக்கத்துடனும் அவரை நோக்கி விரைந்து செல்வதிலிருந்து எதுவும் நம்மைத் தடுக்காதபடி, மற்ற எல்லா உலகப் பிணைப்புகளிலிருந்தும் நாம் விடுபடுவதும் அடங்கும். கடவுளும் அவரது புனித… மட்டுமே நமது ஒரே பற்றாக இருக்கும்படி, இவ்வாழ்வின் ஒவ்வொரு பற்றிலிருந்தும் நாம் விடுதலை பெற வேண்டும்.

சிந்தனை 267: நீதியா, இரக்கமா?

கடவுளின் நீதியைப் பற்றியும் அவரது இரக்கத்தைப் பற்றியும் பேசுவது பொருத்தமானதே.  அவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.  கடவுளுக்குப் பணிபுரிய மறுத்த வானதூதர்களுக்கு அவரது நீதித்தீர்ப்பு வழங்கப்பட்டதுபோலவே, மனந்திரும்ப மறுப்பவர்களுக்கும் அது வழங்கப்படும்.  ஆனால், இப்போதைக்கு, கடவுள் இரக்கமுள்ளவர் என்று கூறுவதே இன்னும் பொருத்தமானது.  உண்மையில்…

சிந்தனை 266: புனிதத்தை நோக்கிச் செல்லும்போது ஏற்படும் மனத்தளர்ச்சி

நீங்கள் புனிதராக விரும்புகிறீர்களா? உங்கள் பதில் “ஆம்” என்பதாக இருக்கும் என நம்புகிறோம். ஆனால் இந்தக் கேள்விக்குப் பதில் என்ன: உங்களால் புனிதராக முடியும் என்று நினைக்கிறீர்களா? இதற்குப் பதிலளிப்பது இன்னும் கடினமாக இருக்கலாம். புனிதத்தைப் பற்றிக் கனவு காண்பதும் அதை விரும்புவதும் எளிது…

சிந்தனை 264: இயேசுவுடன் ஒரு தியானம்

நீங்கள் எப்போதாவது தியானத்தில் பங்கேற்றிருக்கிறீர்களா?  வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விலகி, நம் ஆண்டவருக்குச் செவிமடுக்கவும் அவரது இரக்கமுள்ள திருமுன்னிலையில் இருக்கவும் நீண்ட நேரம் செலவிடும் பேறு சிலருக்குக் கிடைக்கிறது.  மற்றவர்களுக்கோ இத்தகைய தியானத்தில் பங்கேற்க ஒரு நாள்கூட ஒதுக்குவது கடினமாக இருக்கிறது.  எப்படியிருந்தாலும்…

சிந்தனை 262: அன்பின் நெறியா, நீதியின் நெறியா

இறைவனின் கரத்திலிருந்து நாம் தப்ப முடியாது.  அவரே அண்டத்தைத் தாங்கி, அனைத்தையும் இருப்பில் நிலைநிறுத்துகிறார்.  அவரது இடையறாத பராமரிப்பு இல்லையெனில், நாம் இருப்பதையே நிறுத்திவிடுவோம்.  ஆயினும், நம்மைப் பராமரித்து வழிநடத்தும் அவரது கரத்தின்கீழ் நாம் இரு வழிகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கிறோம்.  நாம் “அன்பின் நெறியால்” அல்லது “நீதியின் நெறியால்” வழிநடத்தப்படுகிறோம்.  அந்த…

சிந்தனை 258: கடவுளின் நெருக்கம்

கடவுள் எங்கே இருக்கிறார்?  கடவுள் விண்ணகத்திலோ தொலைதூர இடமொன்றிலோ இருந்துகொண்டு, நம்மைக் கண்ணோக்கி, தமது திருவுளத்திற்கு ஏற்ப படைப்பனைத்தையும் வழிநடத்துகிறார் என்று எண்ணுவது எளிது.  இது உண்மைதான்; ஆனால் இதுவே முழுமையான கண்ணோட்டம் அல்ல.  கடவுள் நம்மையும் படைக்கப்பட்ட உலகையும் வெகுவாகக் கடந்தவர் என்பதால், அவர் முற்றிலும் “அனைத்தையும் கடந்தவர்” ஆவார்.  ஆனால் அவர்…

சிந்தனை 257: கடவுளின் நீண்டகாலத் திட்டம்

நம் ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடு பணிபுரிய நீங்கள் நாடும்போது, ஒவ்வொரு நாளும் தமது திருவுளத்தைப் பற்றி அவர் உங்களிடம் பேசுவதை உணரலாம். அது முற்றிலும் தெளிவாக இல்லாவிட்டாலும், உங்களிடமிருந்து அவர் இதை அல்லது அதை விரும்புகிறார் என்ற ஓர் உணர்வு உங்களுக்கு இருக்கலாம். கடவுள் உங்கள் வாழ்வுக்காக வைத்திருக்கும் திட்டத்தைப் பொதுவாக உங்களுக்கு முழுவதுமாக வெளிப்படுத்துவதில்லை…