தமிழ்

சிந்தனை 256: உங்களால் இயன்றதைச் சிறப்பாகச் செய்தல்

இறைவன் நம்மிடம் கேட்பது வெற்றி பெறுவதையல்ல, உண்மையுடன் இருப்பதையே என்று புனித அன்னை தெரேசா கூறியது அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆண்டவரின் புனிதத் திருவுளத்திற்கு உண்மையுடன் இருக்க முயன்று, நம்மால் இயன்ற மிகச் சிறந்ததை அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு, மீதியை அவரிடம் விட்டுவிட நாம் அழைக்கப்படுகிறோம்.  சில வேளைகளில், நம்மால் இயன்ற “மிகச் சிறந்ததை” செய்தாலும், அது நாம் விரும்பும் நல்ல கனியைத் தராததுபோல் தோன்றலாம்…

சிந்தனை 251: உங்கள் இதயத்தின் உள்ளுறைவிடம்

ஆண்டவர் உங்களிடம் வந்து, உங்கள் இதயத்திற்குள் தமது உறைவிடத்தை அமைத்துக்கொள்ள விரும்புகிறார்.  ஆனால் அவர் உங்களிடம் வரும்போது எதைக் காண்கிறார்?  உங்கள் இதயம் எந்த நிலையில் இருக்கிறது?  சில இதயங்கள் நறுமணம் வீசும் ரோஜாத் தோட்டம்போல் இருக்கின்றன.  அங்கே ஒளியும் அழகும் மாட்சியும் …

சிந்தனை 248: அளவற்ற வளங்கள்

மிகச் சிறிய அளவு உயிர்வாயுவை மட்டுமே கொண்டு அளவற்ற ஆற்றலை உருவாக்கும் ஓர் இயந்திரத்தைப் படைத்து, அதன் வழியாக அளவற்ற இயற்கை வளங்களுக்கான ஓர் ஊற்றை நீங்கள் கண்டுபிடிப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.  நீங்கள் உருவாக்கிய இயந்திரத்தை இயக்கினால் போதும், ஆற்றல் உற்பத்தியாகும்…

சிந்தனை 244: உலக முடிவுவரை பணியாற்றுதல்

கடவுளின் செயல்களைப் பரப்புவதற்காக நீங்கள் இரவும் பகலும் உழைக்கிறீர்கள் என்றால், அது நல்லதே. கடவுளின் திருவுளத்திற்குப் பணிசெய்யவும் அவருடைய இறை இரக்கத்தைப் பரப்பவும் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பிலிருந்து நல்ல கனிகள் விளையும். ஆனால், உலக முடிவுவரை தமது இரக்கத்தைப் பரப்பக் கடவுள் நம்மைப் பயன்படுத்த முடியும் என்பதையும் நாம் உணர வேண்டும். எப்படி? மட்டுமே…

சிந்தனை 243: இயேசு தாம் அன்புசெய்வோருக்கு அளிக்கும் சிறப்புப் பரிசு

நீங்கள் அன்புசெய்யும் ஒருவரை எவ்வாறு நடத்துவீர்கள்?  பொதுவாக, நம் குடும்பத்தினருக்கும் மிக நெருங்கிய நண்பர்களுக்கும் எது சிறந்ததோ, எது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யுமோ அதையே நாம் விரும்புகிறோம்.  கடவுளும் நம் ஒவ்வொருவருக்கும் அதையே விரும்புகிறார்; ஆனால் அவரது பார்வையில் எது எவ்வாறு அமைகிறது என்பது நமக்கு வியப்பளிக்கலாம்…

சிந்தனை 242: தனித்துவமாக ஒளிரும் உண்மையான அழகு

“அழகு” என்பது காண்பவரின் கண்களில் உள்ளது என்று சொல்லப்படுவதுண்டு.  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அழகு என்பதன் வரையறை அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைச் சார்ந்தது என்று சிலர் கூறுகின்றனர்.  மேலோட்டமான நிலையில் இதில் ஓரளவு உண்மை இருக்கலாம் என்றாலும், ஒரு…

சிந்தனை 240: வாழ்வில் இனிமையா, கசப்பா?

உங்கள் வாழ்வில் எதை விரும்புகிறீர்கள்?  அன்றாடம் புலன்களில் இனிமையான அனுபவங்களையா, கசப்பான அனுபவங்களையா?  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்கள் அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களில் மகிழ்ச்சி காண விரும்புகிறீர்களா, அல்லது நீங்கள் நிறைவேற்றும் அன்றாடக் கடமை ஒருவிதக் கசப்பை உங்கள்…

சிந்தனை 237: விசுவாசத்தின் இருள் நம் அன்பைத் தூய்மைப்படுத்துகிறது

புனித ஃபவுஸ்தினா உட்படப் பெரும் புனிதர்கள் பலர், கடவுளோடு தங்களுக்குள்ள உறவில் ஓர் அக இருளை அனுபவித்தனர்.  இது மிகவும் மறைபொருள் நிறைந்த ஓர் அனுபவம்.  ஓர் ஆன்மா கடவுளோடு நெருங்கிய உறவில் வளரும்போது, அந்தப் பயணத்தில் பல ஆறுதல்களும் அன்புணர்வுகளும்…

சிந்தனை 234: ஆழ்ந்த இறைநம்பிக்கையின் தெளிவின்மை

பொதுவாக, ஒருவர் இறைநம்பிக்கையின் பயணத்தைத் தொடங்கும்போது, எண்ணற்ற உள்பார்வைகளையும் வெளிப்பாடுகளையும் பெற்று மகிழ்கிறார்.  இறைநம்பிக்கை வாழ்வின் பல்வேறு அம்சங்கள் உயிர்ப்புப் பெறுகின்றன; வாழ்வின் பல மறைபொருள்களைப் பற்றிய புரிதலும் கிடைக்கிறது…

சிந்தனை 233: மௌனத்தின் பதில்

சில வேளைகளில், வாழ்வில் நாம் அனுபவிப்பவற்றைப் பற்றி இறைவனிடம் மனம் திறந்து, முழுமையாகப் பேசுவது உதவியாக இருக்கலாம்.  பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு ஏற்படலாம்.  இறைவனும் செவிகொடுப்பார்…