தமிழ்

சிந்தனை 191: அதிகம் பேசும் ஆன்மா

அளவுக்கு அதிகமாகப் பேச வேண்டும் என்ற தேவை, இறைவனுடன் ஒன்றித்திருக்கும் அக வாழ்வுக்கு உண்மையான ஓர் ஆபத்தாகும்.  இல்லை, பேசுவது பாவமல்ல; பல வேளைகளில் அது பிறரிடம் காட்டும் இரக்கச் செயலாகவும் இருக்கிறது.  ஆனால், அளவுக்கு அதிகமாகப் பேசுவது இறைவனின் இரக்கத்திற்குத் தடையாக இருக்கும் நேரங்களும் உண்டு.  பேசுவது, தன்னளவில்…

சிந்தனை 190: படைப்பு அனைத்தும் கடவுளுக்கு மாட்சி அளிக்கிறது

அனைத்தும் ஒரே இறுதி நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளன: அதிபுனித மூவொரு கடவுளுக்குப் புகழும் மாட்சியும் அளிப்பதே அது.  இதைவிட மேலானதோ, குறைவானதோ, வேறானதோ ஆகிய எந்த நோக்கத்திற்காகவும் நாம் படைக்கப்படவில்லை.  மனிதர்களாகிய நாம், நமது வாழ்வின் வழியாகக் கடவுளுக்கு நாம் செலுத்தும் ஆராதனைக்கே உரிய தனித்துவமான புகழையும் மாட்சியையும் அளிக்க அழைக்கப்பட்டுள்ளோம்…

சிந்தனை 189: அச்சத்தை வெல்லுதல்

பல்வேறு காரணங்களால் அச்சம் ஏற்படுகிறது. உடனடியாக நேரக்கூடிய ஓர் ஆபத்தை உணரும்போது, ஒருவகைத் தற்காப்புச் செயல்பாடாகத் திடீர் அச்சம் எழுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கார் திடீரென நீங்கள் செல்லும் பாதைக்குள் திரும்பி வருவதே அந்த உடனடி ஆபத்து என்றால், இந்த அச்சம் உண்மையிலேயே உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடும். திடீர் அச்சம் உங்களை நடவடிக்கை எடுக்க…

சிந்தனை 188: ஆண்டவரின் கோரிக்கைகள்

ஆண்டவர் உங்களை ஏதாவது செய்யச் சொன்னால், அதை மறுக்கும் வாய்ப்பு உங்களுக்கு உண்டா?  “இல்லை” என்று நீங்கள் சொல்ல முடியும் என்ற அளவில் அந்த வாய்ப்பு உங்களுக்கு உண்டு.  ஆனால் அவ்வாறு சொல்வது பாவம்.  எனினும், நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றத் தேர்ந்தெடுத்திருந்தால், உங்கள் இலக்கு விண்ணகமாக இருந்தால், ஆண்டவர் நம்மிடம் கேட்கும் அனைத்தையும் செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று சொல்வதே பொருத்தமானது.  அவருடைய…

சிந்தனை 187: புயலுக்குப் பின் ஒரு வானவில்

படைப்பே இறைவனின் மாட்சியைப் பறைசாற்றி, நம்பிக்கை சார்ந்த உண்மைகளை நமக்குக் கற்பிப்பது வியப்புக்குரியது.  வானவில்லை எடுத்துக்கொள்ளுங்கள்.  அது ஒளிமிக்கதாகவும் அழகாகவும், வண்ணமயமாகவும் வியப்பூட்டுவதாகவும் இருக்கிறது.  வானவில்லைப் பார்க்கும்போது அனைவரும் மகிழ்கிறார்கள்.  ஆனால் மழையோ புயலோ இல்லாமல் வானவில் என்ற ஒன்றே இருக்காது.  வாழ்க்கையும் அப்படித்தான்.  நாம்…

சிந்தனை 186: இறைவனால் ஊடுருவித் துளைக்கப்படுதல்

உங்கள் ஆன்மா இறைவனால் “ஊடுருவித் துளைக்கப்பட்டுள்ளதா”?  அவர் உங்களுள் “நிறைந்திருக்கிறாரா”?  அவரது இறைத்தன்மைக்குள் “கரைந்து”, அவரது இரக்கத்தால் “சூழப்பட” உங்களையே அனுமதிக்கிறீர்களா?  இறைவனோடு நமக்குள்ள உறவை விவரிக்க நாம் பயன்படுத்தக்கூடிய சொற்கள் எத்தனையோ உள்ளன.  இறைவன் யார் என்பதையும், எத்தகைய…

சிந்தனை 185:  அளவற்ற வளங்களுடன் தாராளமாக வழங்குதல்

தொலைதூர நாடொன்றில் கடும் பஞ்சம் நிலவுவதை நீங்கள் அறிந்திருந்து, அந்தப் பஞ்சத்தைப் போக்க அளவற்ற வளங்களும் உங்களுக்கு அருளப்பட்டிருந்தால், தேவையில் இருப்போருக்கு இந்தக் கொடையை வழங்காமல் ஏன் வைத்திருப்பீர்கள்?  நீங்கள் அப்படிச் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறோம்.  உங்கள் பொறுப்பை உணர்ந்து, தேவையானதைச் செய்வீர்கள் என நம்புகிறோம்…

சிந்தனை 184: அருள்பணியாளர்களின் திருப்பணியில் வெளிப்படும் இரக்கம்

இல்லை, அருள்பணியாளர்கள் குறையற்றவர்கள் அல்ல.  அவர்கள் நாள்தோறும் பாவம் செய்கிறார்கள்.  மனிதகுலத்தின் மற்ற அனைவரையும் போலவே, அவர்களுக்கும் அன்றாட வாழ்வில் மனந்திரும்புதலும் மனமாற்றமும் தொடர்ந்து தேவைப்படுகின்றன.  ஆனால் அவர்கள் அருள்பணியாளர்கள்.  அவர்களது புனித குருத்துவ அருள்பொழிவின் காரணமாக, ஆண்டவர் அவர்கள் வழியாகத் தெளிவான…

சிந்தனை 183: துன்பத்தின் மதிப்பைக் கவனத்தில் கொள்ளுதல்

நாம் துன்புறும்போது, அதிலிருந்து விடுபட ஒரு வழியைத் தேடுகிறோம். நிவாரணத்தை நாடுகிறோம். ஆனால் விண்ணகத்திலிருந்து திரும்பிப் பார்க்கும்போது, மனமுவந்து தேர்ந்தெடுத்துத் தழுவிக்கொண்ட துன்பத்தின் அளப்பரிய வல்லமையை நம்மால் காண முடியும். துன்பம் தன்னிலேயே நல்லது என்பதல்ல இதன் பொருள்; மாறாக, துன்பம் மீட்கப்பட்டு, அதற்கு வழங்கப்பட்டுள்ளது…

சிந்தனை 182: ஆணவத்தின் இரகசியங்களை ஊடுருவி அறியும் ஞானம்

ஆணவம் நம்மை முழுவதுமாக ஆட்கொள்ளக்கூடும்.  அப்போது நம்மைப் பற்றியும் நமது வேதனையைப் பற்றியும் மட்டுமே நாம் சிந்திக்கிறோம்.  ஒருவேளை இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கலாம்.  நீங்கள் மனக்காயமடைந்து, அந்தக் காயத்தையே நினைத்து மனம் குமுறிக்கொண்டிருக்கலாம்.  அது உங்கள் இதயத்தில் கசப்பை உருவாக்குகிறது; அந்தக் காயத்தைக் குணப்படுத்த நீங்கள் முயல்கிறீர்கள்.  ஆனால்…