தமிழ்

சிந்தனை 171: மண்ணகத்தை விண்ணகத்தோடு ஒப்பிடுதல்

நீங்கள் விண்ணகத்தை அடையும்போது, மண்ணகத்தில் கழித்த இந்தக் காலத்தைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். இந்த வாழ்வை இழந்துவிட்டதாக ஏங்குவீர்களா? மீண்டும் திரும்பிவர விரும்புவீர்களா? இங்கு இருந்தபோது இன்னும் அதிகமாகப் பணம் சம்பாதித்திருக்கலாமே அல்லது உலக அளவில் இன்னும் அதிக வெற்றி பெற்றிருக்கலாமே என்று நினைப்பீர்களா? பெரும்பாலும் அப்படி நினைக்கமாட்டீர்கள். விண்ணகத்தோடு ஒப்பிடும்போது, இவ்வுலகம் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. அதற்குப் பொருள் இதுவல்ல…

சிந்தனை 170: நல்ல நாட்களிலும் கடின நாட்களிலும் உண்மையுடன் நிலைத்திருத்தல்

இறைவனை அன்பு செய்ய வேண்டும் என்ற உணர்வு நமக்கு இருக்கும்போதும், வாழ்க்கை நன்றாகவும் மிகவும் எளிதாகவும் செல்லும்போதும் அவரை அன்பு செய்வது எளிது.  ஆனால் வாழ்க்கை சவாலாக அமையும்போது, நமக்குள்ளேயே முடங்கிக்கொள்ளும் சோதனை உடனே நமக்கு ஏற்படுகிறது; அவ்வாறு செய்வதால், இறைவன் மீதுள்ள நம் அன்பிலிருந்து விலகிவிடுகிறோம்.  ஆனால் புனிதத்தின் உண்மையான ஓர் அடையாளம், நாம் அன்பு செய்வதே…

சிந்தனை 169: அரசரின் முன்னிலையில் அமைதி

மிகுந்த அதிகாரம் கொண்ட ஒருவரைச் சந்திப்பது உற்சாகத்தை ஏற்படுத்தலாம்.  எடுத்துக்காட்டாக, நீங்கள் பணிபுரிய விரும்பும் ஒரு நிறுவனத்தின் தலைவரைச் சந்திப்பதோ, புகழ்பெற்ற ஒருவரை முதன்முறையாகச் சந்திப்பதோ, ஆயரை அல்லது திருத்தந்தையைச் சந்திப்பதோ ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தலாம்.  ஆனால்…

சிந்தனை 168: பிறருக்காக இறைவனின் இரக்கத்தை வேண்டிப் பெறுதல்

பாவிகளை நரக நெருப்பிலிருந்து விடுவிக்கும் வல்லமை கொண்டது ஒன்றே ஒன்றுதான். அதுவே இரக்கம். இறைவன் தமது இரக்கத்தை இலவசமாகவும் நிறைவாகவும் வழங்குகிறார். ஆனால், நாம் … கொண்டு மன்றாடும்போது, நம் மன்றாட்டுகளுக்குப் பதிலாகவும் தமது இரக்கத்தை வழங்க அவர் திருவுளம் கொண்டுள்ளார்.

சிந்தனை 167: ஆண்டவர்மீது மிகுந்த ஆவல் கொள்ளுதல்

நீங்கள் செபிக்கும்போது, அதுவும் நீண்ட நேரம் முழு முனைப்புடன் செபிக்கும்போது, ஆண்டவர் உங்கள் உள்ளத்தில் நுழைவார். அவர் உங்களுடன் உறவாடி, தமது இதயத்தை உங்கள் இதயத்துடன் ஒன்றிப்பார். இதன் விளைவுகளை நீங்கள் பல்வேறு வழிகளில் அனுபவிப்பீர்கள். பொதுவாக ஏற்படும் ஒரு விளைவு இதுதான்: கிறிஸ்துவோடு ஒன்றிப்பதில் நீங்கள் எவ்வளவு நெருக்கமாக ஈர்க்கப்படுகிறீர்களோ, அவ்வளவு…

சிந்தனை 166: கிறிஸ்துவோடு நீங்கள் கொண்டுள்ள ஒன்றிப்பின் வல்லமை

நீங்களே எல்லாம் வல்லவராக இருப்பதை, அல்லது எல்லாம் வல்ல ஒருவரின் நெருங்கிய நண்பராக இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தந்தை புனித முதலாம் லியோவைப் பற்றிய ஒரு நிகழ்வு இறைவனின் வல்லமையை வெளிப்படுத்துகிறது. ஹூணரான அட்டிலாவும் அவரது வன்முறைமிக்க படையும் உரோமை நகரைச் சூறையாட முயன்றதாகச் சொல்லப்படுகிறது. திருத்தந்தை புனித லியோ…

சிந்தனை 165: உத்தம மனஸ்தாபம்

நம் பாவங்களை நாம் உணரும்போது, பல்வேறு விதங்களில் பதிலளிக்கக்கூடும். நாம் அக்கறையின்றி இருக்கலாம்; அல்லது கடவுளின் நீதிக்குப் பயந்து மனந்திரும்பலாம். ஆனால் அன்போடு கடவுளிடம் திரும்பி, அந்த அன்பின் விளைவாக உண்மையான மனவருத்தம் கொள்வதே மிகச் சிறந்த பதிலாகும். கடவுள்மீது நமக்கு மிகுந்த ஆர்வமிக்க அன்பு இருந்தால்…

சிந்தனை 164: பாவிகளின் ஆன்மாக்களுக்காக ஏங்குதல்

வெளிப்படையான பாவத்தோடு வாழும் ஒருவரைக் காணும்போது நீங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறீர்கள்?  பலர் இகழ்ச்சியோடும் கடுமையான தீர்ப்போடும் எதிர்வினையாற்றுகிறார்கள்.  ஒருவர் சட்டத்தை மீறும்போது, நாம் அவரைக் கடுமையாகக் கண்டனம் செய்கிறோம்.  ஒருவர் ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழும்போது, நாம் அவரை இழிவுபடுத்துகிறோம்.  மிகப் பெரும்பாலும், நமது மனப்பான்மை…

சிந்தனை 163: உங்கள் “அவலநிலையில்” கடவுளை மாட்சிப்படுத்துதல்

உங்கள் சொந்த ஆன்மாவின் அவலநிலையைக் காண்கிறீர்களா? இத்தகைய கேள்வி சிலருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால் கடவுளின் இரக்கத்தை நாம் புரிந்துகொண்டு, அவர் மிகுதியாக மாட்சிப்படுத்தப்படுவதற்கு நமது “அவலநிலையே” வழிவகுக்கிறது என்பதை உணர்ந்தால், இத்தகைய எண்ணத்திலிருந்து நாம் விலகிச் செல்ல மாட்டோம். பலர்…

சிந்தனை 162: ஒளி இருளை அகற்றுகிறது

ஒளி இருளை அகற்றுகிறது.  அறிவியல் அடிப்படையில் பார்த்தால், ஒளியும் இருளும் ஒன்றையொன்று எதிர்க்கும் ஆற்றல்கள் அல்ல என்பதை நாம் அறிவோம்; மாறாக, ஒளி இல்லாத நிலையே இருள்.  ஒளி உள்ளே நுழையும்போது, இருள் இல்லாமல் போகிறது.  இறைவனின் இரக்கமும் அவ்வாறே செயல்படுகிறது.  இரக்கம் இல்லாமல், நம் ஆன்மாக்கள் இருண்டு கிடக்கின்றன.  நாம் சந்தேகத்திலும் குழப்பத்திலும் விழுகிறோம்…