தமிழ்

சிந்தனை 151: ஆன்மிக உறவு

மற்றொருவருடன் உண்மையாகவே நெருக்கமாக இருப்பதற்கும், அவரை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதும் உங்கள் மனதிலும் இதயத்திலும் உள்ள ஒவ்வொன்றையும் பகிர்ந்துகொள்வதும் அவசியமா? இருவரின் ஆன்மாக்களும் கடவுளுடன் நெருக்கமாக இணைந்திருந்தால், அது அவசியமில்லை. அத்தகைய நிலையில், ஒவ்வொருவரும் தாங்கள் பகிர்ந்துகொள்ளும்…

மேலும் படிக்க

சிந்தனை 150: மனிதக் கருத்துகளின் கண்ணியில் சிக்காமல் இருத்தல்

பிறர் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமா?  வேறு வார்த்தைகளில் சொன்னால், பிறருடைய “கருத்துகளைப்” பற்றி நீங்கள் அக்கறை கொள்ள வேண்டுமா?  ஆம் என்றும் இல்லை என்றும் சொல்லலாம்.  உண்மையான “கருத்து” மட்டுமே முக்கியம் என்பதால், அந்த வகையில் நாம் அக்கறை கொள்ள வேண்டியதில்லை.  இறைவனின் சிந்தனையில் இருப்பதே உண்மை.  அந்த உண்மை…

மேலும் படிக்க

சிந்தனை 149: உள்ளார்ந்த தூண்டுதல்கள்

தேவையில் இருப்பவர்களுடன் கடவுளின் இரக்கத்தைப் பகிர்ந்துகொள்ள நம்மைச் சுற்றி எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.  ஆனால் இவ்வாய்ப்புகளைத் தவறவிடுவது மிக எளிது.  இறை இரக்கத்தின் கருவிகளாக நாம் மாறுவதற்கு நம்மையே கையளிக்கும் முதன்மையான வழிகளில் ஒன்று, இடைவிடாமல் கவனமாயிருக்க முயல்வதே…

மேலும் படிக்க

சிந்தனை 148: உத்தரிப்பிடத்தில் இருப்போருக்கான இரக்கம்

நம் அன்புக்குரிய ஒருவர் இறக்கும்போது, அவர் விண்ணகத்தில் இருக்கிறார் என்றும், இனி அவருக்கு நம் செபங்கள் தேவையில்லை என்றும் உடனடியாகக் கருதிவிடுவது எளிது. ஆனால் நமக்கு முன்பே இறந்துவிட்டவர்களுக்கு நாம் வழங்கக்கூடிய மிகச் சிறந்த கொடைகளில் ஒன்று நமது செபங்களே. அருள் நிலையில் இறக்கும் ஒவ்வொருவரும்…

மேலும் படிக்க

சிந்தனை 147: செயல்கள், சொற்கள், செபங்கள் வழியாக இரக்கம்

கடவுளின் அளவிட முடியாத இரக்கத்தின் கருவியாக மாற விரும்புகிறீர்களா?  அப்படியானால், உங்கள் செயல்கள், சொற்கள், செபங்கள் வழியாக அதைச் செய்யலாம்.  முதலில், உங்கள் செயல்களால் இரக்கத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை எப்போதும் விழிப்புடன் தேடிக்கொண்டிருக்க வேண்டும்.  பல வேளைகளில், வாய்ப்பு கிடைக்கும்போது (எடுத்துக்காட்டாக, மற்றொருவரை மன்னிக்கும் வாய்ப்பு), நாம் முகம் திருப்பி…

மேலும் படிக்க

சிந்தனை 146: கிறிஸ்துவின் திருப்பாடுகளைத் தியானித்து செபித்தல்

நம் ஆண்டவரின் புனிதத் திருப்பாடுகளைப் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.  ஆனால் உண்மையான உணர்வோடும் அன்போடும் அவரது திருப்பாடுகளை உற்றுநோக்கச் சிலரால் மட்டுமே முடிகிறது.  நமது செபத்தில், மிகுந்த பக்தியோடு நம் ஆண்டவரின் திருப்பாடுகளைத் தியானிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.  இது நம் சொந்த முயற்சியால் நாம் செய்வது என்பதைவிட…

மேலும் படிக்க

சிந்தனை 145: அன்பின் வியப்பில் தன்னையே மறத்தல்

அன்பில் ஆழ்வது ஒருவரை “மெய்மறக்கச்” செய்யலாம். இத்தகைய மனித அன்பு உங்களை ஓரளவு பேச்சற்றவராக்கலாம்; நீங்கள் உணர்வதைத் துல்லியமாக வெளிப்படுத்துவது அவசியம் என்றோ, இயலும் என்றோகூட உங்களுக்குத் தோன்றாமல் போகலாம். ஆனால் கடவுள்மீதுள்ள அன்பு, மனித அன்பின் எந்த அனுபவத்தையும் கடந்தது. ஆகவே, அதை அனுபவிக்கும்போது…

மேலும் படிக்க

சிந்தனை 144: உங்கள் புனிதம் பிறருக்கு ஒரு கொடை

இயேசு தமது இறை இரக்கத்தை உங்கள் ஆன்மாவில் பொழிய ஆழ்ந்த விருப்பம் கொண்டுள்ளார்.  உங்கள் பாவத்தை மாற்றியமைத்து, உங்களைத் தமது நிறைவான உறைவிடமாக்க அவர் விரும்புகிறார்.  இது நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு கொடை; எனினும், இதை ஏற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.  நம் ஆண்டவரிடமிருந்து எண்ணற்ற அருள்களை ஏற்றுக்கொள்வது நம் நலனுக்காக மட்டுமல்ல…

மேலும் படிக்க

சிந்தனை 143: நம்பிக்கை, நம்பிக்கை, இன்னும் அதிக நம்பிக்கை

இந்த நூலின் ஒவ்வொரு சிந்தனையும் ஓர் இறைவேண்டலுடன் முடிகிறது; ஒவ்வோர் இறைவேண்டலும், “இயேசுவே, உம்மை நம்புகிறேன்” என்ற வேண்டுதலுடன் முடிகிறது.  ஆனால், நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?  நம்புவது என்பது ஒரே ஒருமுறை செய்யும் செயல் மட்டுமல்ல.  அது நாம் செய்கிறோமா, இல்லையா என்பதோடு முடிந்துவிடும் ஒன்றல்ல.  நாம் தொடர்ந்து இன்னும் ஆழமாக நம்ப வேண்டும்.  நாம் கொள்ளும் நம்பிக்கையின் ஆழங்களுக்கு எல்லையே இல்லை…

மேலும் படிக்க

சிந்தனை 142: ஆண்டவரின் அமைதி தீமையை விரட்டியடிக்கிறது

தீயவனாகிய சாத்தான் இருப்பதை ஏற்றுக்கொள்வது முக்கியம். அவனது கோபத்தையும் வெறுப்பையும் உணர்ந்துகொள்வதும் முக்கியம். அவனது வெறுப்பின் தீவிரம் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது. நம்மை வெறுப்பதையும், தன் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தி நம்மை அழிக்க முயல்வதையும் அவனால் நிறுத்திக்கொள்ள இயலாது. இதை அறிவது ஏன்…

மேலும் படிக்க