தமிழ்

சிந்தனை 269: இரக்கத்தையும் அவலநிலையையும் ஒருசேர உற்றுநோக்குதல்

உற்றுநோக்குவதற்கு இரண்டு விடயங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடிந்தால், அவை எவையாக இருக்கும்?  உண்மையில், உற்றுநோக்குவதற்கு மிகச் சிறந்த இரு விடயங்கள் கடவுளின் இரக்கமும் உங்கள் சொந்த அவலநிலையுமே.  கடவுளின் இரக்கம் உற்றுநோக்க வேண்டிய மிக முக்கியமான விடயங்களில் ஒன்று என்பது பெரும்பாலும் உடனடியாகவே புரியும்…

சிந்தனை 268: மரணத்தைப் பற்றிச் சிந்தித்தல்

உங்கள் மரணத்தைப் பற்றி நினைப்பது அச்சமூட்டுவதாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் அதைப் பற்றி அடிக்கடி சிந்திப்பதில்லை. ஆனால், ஒருவர் தமது மரணத்தை நேரடியாகவும் முழு நம்பிக்கையுடனும் நோக்க முடிவது ஓர் அருளாகும். உங்கள் வாழ்வு சீராக இருந்தால் மட்டுமே இவ்வாறு முழு நம்பிக்கையுடன் நோக்க முடியும்…

சிந்தனை 262: அன்பின் நெறியா, நீதியின் நெறியா

இறைவனின் கரத்திலிருந்து நாம் தப்ப முடியாது.  அவரே அண்டத்தைத் தாங்கி, அனைத்தையும் இருப்பில் நிலைநிறுத்துகிறார்.  அவரது இடையறாத பராமரிப்பு இல்லையெனில், நாம் இருப்பதையே நிறுத்திவிடுவோம்.  ஆயினும், நம்மைப் பராமரித்து வழிநடத்தும் அவரது கரத்தின்கீழ் நாம் இரு வழிகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கிறோம்.  நாம் “அன்பின் நெறியால்” அல்லது “நீதியின் நெறியால்” வழிநடத்தப்படுகிறோம்.  அந்த…

சிந்தனை 261: பிறரில் மறைந்திருக்கும் இயேசு

இயேசு வறுமையிலும் பசியிலும் குளிரிலும் வாடியவராக உங்களிடம் வந்து, தம்மைக் கவனித்துக்கொள்ளும்படி கேட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.  இந்த அனுபவம் உங்களைத் திடுக்கிடச் செய்து, இவர் உண்மையிலேயே இயேசுதானா என்று கேள்வி எழுப்பக்கூடும்.  ஆனால், அவர் இயேசுதான்.  தேவையில் இருக்கும் மனிதர் வழியாக இயேசு ஒவ்வொரு நாளும் நம்மிடம் வருகிறார்.  ஒருவேளை…

சிந்தனை 259: தாழ்ச்சியுள்ள ஆன்மாவின் அழகு

ஒருவரை அழகுள்ளவராக்குவது எது? மற்ற எல்லாவற்றையும்விட, தாழ்ச்சி என்னும் நற்பண்பே அவரை அழகுள்ளவராக்குகிறது. தாழ்ச்சிக்கு ஒப்பற்ற ஈர்ப்புண்டு. தொடக்கத்தில் தாழ்ச்சியுள்ள ஆன்மா சிலரை அவ்வளவாகக் கவராமல் இருக்கலாம். ஆனால் காலப்போக்கில், மிகுந்த ஆணவமும் தன்னலமும் கொண்டவரைக்கூடத் தாழ்ச்சி தன்னிடம் ஈர்த்துக்கொள்ளும். அது…

சிந்தனை 258: கடவுளின் நெருக்கம்

கடவுள் எங்கே இருக்கிறார்?  கடவுள் விண்ணகத்திலோ தொலைதூர இடமொன்றிலோ இருந்துகொண்டு, நம்மைக் கண்ணோக்கி, தமது திருவுளத்திற்கு ஏற்ப படைப்பனைத்தையும் வழிநடத்துகிறார் என்று எண்ணுவது எளிது.  இது உண்மைதான்; ஆனால் இதுவே முழுமையான கண்ணோட்டம் அல்ல.  கடவுள் நம்மையும் படைக்கப்பட்ட உலகையும் வெகுவாகக் கடந்தவர் என்பதால், அவர் முற்றிலும் “அனைத்தையும் கடந்தவர்” ஆவார்.  ஆனால் அவர்…

சிந்தனை 249: துன்பத்தின் கனி

ஒருவர் பெரிதும் துன்புற்ற பிறகே, அத்தகைய துன்பத்திலிருந்து விளையக்கூடிய நற்கனிகளைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்.  துன்பம், தன்னிலே, வீழ்ச்சியுற்ற நமது மனித நிலையின் விளைவாகும்.  ஆனால் இயேசு நமது மனித நிலைக்குள் வந்து, துன்பத்தை ஏற்றுக்கொண்டு…

சிந்தனை 247: தேவைகள் உள்ளவர்கள் தரும் ஆசீர்வாதம்

உங்கள் குடும்பத்தில் ஒருவர் கடுமையாக நோயுற்றிருந்தால், அல்லது சிறையில் இருந்தால், அல்லது ஏதேனும் பெரிய தேவையில் இருந்தால், அது உங்களுக்கு ஒரு சுமையாக இருக்குமா, அல்லது ஆசீர்வாதமாக இருக்குமா?  இதைப் பற்றிச் சிந்தியுங்கள்.  சிறப்புக் கவனிப்பு தேவைப்படுவோர் உங்கள் வாழ்க்கையை மேலும் கடினமாக்குகிறார்களா?  இந்தக் கேள்விக்கு முற்றிலும் நடைமுறைக் கண்ணோட்டத்தில் பதிலளித்தால், அதற்கான பதில்…

சிந்தனை 246: நற்கருணை உட்கொண்டதும்

நற்கருணை உட்கொண்ட பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?  மனம் அலைபாய, உங்களைச் சுற்றியிருப்பவர்கள்மீது கவனம் செலுத்தி, உண்மையான ஆன்மிக ஆழத்தில் நம் ஆண்டவரைச் சந்திக்கத் தவறி, கவனச் சிதறலுடன் உங்கள் இருக்கைக்குத் திரும்புகிறீர்களா?  அல்லது அந்தத் தருணத்தை உண்மையான இறைவேண்டலுக்கும் ஒன்றிப்புக்குமான தருணமாக அமைய விடுகிறீர்களா…

சிந்தனை 243: இயேசு தாம் அன்புசெய்வோருக்கு அளிக்கும் சிறப்புப் பரிசு

நீங்கள் அன்புசெய்யும் ஒருவரை எவ்வாறு நடத்துவீர்கள்?  பொதுவாக, நம் குடும்பத்தினருக்கும் மிக நெருங்கிய நண்பர்களுக்கும் எது சிறந்ததோ, எது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யுமோ அதையே நாம் விரும்புகிறோம்.  கடவுளும் நம் ஒவ்வொருவருக்கும் அதையே விரும்புகிறார்; ஆனால் அவரது பார்வையில் எது எவ்வாறு அமைகிறது என்பது நமக்கு வியப்பளிக்கலாம்…