தமிழ்

சிந்தனை 267: நீதியா, இரக்கமா?

கடவுளின் நீதியைப் பற்றியும் அவரது இரக்கத்தைப் பற்றியும் பேசுவது பொருத்தமானதே.  அவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.  கடவுளுக்குப் பணிபுரிய மறுத்த வானதூதர்களுக்கு அவரது நீதித்தீர்ப்பு வழங்கப்பட்டதுபோலவே, மனந்திரும்ப மறுப்பவர்களுக்கும் அது வழங்கப்படும்.  ஆனால், இப்போதைக்கு, கடவுள் இரக்கமுள்ளவர் என்று கூறுவதே இன்னும் பொருத்தமானது.  உண்மையில்…

சிந்தனை 263: புயலில் உங்கள் சுக்கானை இயக்கும் கடவுள்

நீங்கள் ஒரு சிறு குழந்தையாக, நடுக்கடலில் ஒரு சிறிய படகில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.  புயல் வீசத் தொடங்குகிறது; எந்தத் திசையிலும் உங்களுக்குக் கரை தெரியவில்லை.  அலைகள் மோதும் ஒவ்வொரு முறையும் படகின் முன்பகுதியை மூழ்கடிக்கின்றன; அவற்றால் அலைக்கழிக்கப்படும் நீங்கள், எப்படிப் பிழைக்கப்போகிறீர்கள் என்று எண்ணுகிறீர்கள்.  இப்போது உங்கள் அப்பா…

சிந்தனை 261: பிறரில் மறைந்திருக்கும் இயேசு

இயேசு வறுமையிலும் பசியிலும் குளிரிலும் வாடியவராக உங்களிடம் வந்து, தம்மைக் கவனித்துக்கொள்ளும்படி கேட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.  இந்த அனுபவம் உங்களைத் திடுக்கிடச் செய்து, இவர் உண்மையிலேயே இயேசுதானா என்று கேள்வி எழுப்பக்கூடும்.  ஆனால், அவர் இயேசுதான்.  தேவையில் இருக்கும் மனிதர் வழியாக இயேசு ஒவ்வொரு நாளும் நம்மிடம் வருகிறார்.  ஒருவேளை…

சிந்தனை 248: அளவற்ற வளங்கள்

மிகச் சிறிய அளவு உயிர்வாயுவை மட்டுமே கொண்டு அளவற்ற ஆற்றலை உருவாக்கும் ஓர் இயந்திரத்தைப் படைத்து, அதன் வழியாக அளவற்ற இயற்கை வளங்களுக்கான ஓர் ஊற்றை நீங்கள் கண்டுபிடிப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.  நீங்கள் உருவாக்கிய இயந்திரத்தை இயக்கினால் போதும், ஆற்றல் உற்பத்தியாகும்…

சிந்தனை 240: வாழ்வில் இனிமையா, கசப்பா?

உங்கள் வாழ்வில் எதை விரும்புகிறீர்கள்?  அன்றாடம் புலன்களில் இனிமையான அனுபவங்களையா, கசப்பான அனுபவங்களையா?  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்கள் அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களில் மகிழ்ச்சி காண விரும்புகிறீர்களா, அல்லது நீங்கள் நிறைவேற்றும் அன்றாடக் கடமை ஒருவிதக் கசப்பை உங்கள்…

சிந்தனை 239: இரக்கத்தின் முத்திரை

ஒவ்வொரு மாபெரும் புனிதரும் கடவுளின் நன்மைத்தனத்தின் ஏதோ ஓர் அம்சத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். சிலர் உலகச் செல்வங்களின்மீது சிறிதும் பற்றின்றி வாழ்கிறார்கள்; சிலர் தளராத அர்ப்பணிப்புடன் ஏழைகளுக்குப் பணிபுரிகிறார்கள்; சிலர் ஆழ்ந்த செப வாழ்வு வாழ்கிறார்கள்; சிலர் மறைஞான வெளிப்பாடுகளைப் பெறுகிறார்கள்; சிலர் பல தொகுதிகளாக எழுதுகிறார்கள்…

சிந்தனை 232: புயலை அமைதிப்படுத்துதல்

இயேசு புயலை அமைதிப்படுத்திய நிகழ்வை நினைவுகூருங்கள் (மத்தேயு 8:23-27).  வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சவால்களின்போது அவர் உங்களுக்கு அமைதியை அளிப்பார் என்பதற்கான இறைவாக்கு அடையாளமாக இந்த அற்புதச் செயல் நிகழ்த்தப்பட்டது…

சிந்தனை 211: இறையன்னையின் அருகில்

ஒரு தாய் தன் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காகத் தன் உயிரையும் மனமுவந்து கொடுக்கத் தயாராக இருப்பதால், அவளுடைய அன்பை “தீவிரமானது” என்று விவரிக்கலாம். தன் குழந்தை ஆபத்தில் இருக்கும்போதோ, வேதனையில் இருக்கும்போதோ, தேவையில் இருக்கும்போதோ, அவளுடைய தாயுணர்வு உடனே விழித்தெழுகிறது; தன் குழந்தையின் பாதுகாப்புக்காகத் தன் நலனை…

சிந்தனை 208: இரக்கத்தின் ஆன்மிக அம்பு

பொதுவாக, ஓர் அம்பு காயப்படுத்திக் கொல்கிறது. வரலாறு நெடுகிலும் போரிலும் வேட்டையிலும் அம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இரக்கத்தின் ஆன்மிக அம்பு மிகவும் வேறுபட்டது. இறைவாக்கினர் சிமியோன் நம் புனித அன்னையிடம் கூறிய வார்த்தைகளை நினைவுகூருங்கள்: “உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்” (லூக்கா 2:35). மேலும்…

சிந்தனை 207: கிறிஸ்துவின் திருஇதயத்தில் ஆறுதல் பெறுதல்

அன்பும் கனிவும் மிக்க பெற்றோரிடம் நெருங்கி அணைந்துகொள்வதில் குழந்தைகள் பெரும்பாலும் மிகுந்த ஆறுதல் அடைகிறார்கள்.  இந்த அன்புக் கரங்கள் இறுக அணைத்துக்கொள்ளும்போது ஆழ்ந்த நிறைவு கிடைக்கிறது.  இத்தகைய தருணங்களில் அச்சமும் கவலையும் அகல்கின்றன; துயரம் இருந்த இடத்தில் அமைதியும் ஆறுதலும் மீண்டும் மலர்கின்றன.  அவ்வாறே இருக்க வேண்டும்…