தமிழ்

சிந்தனை 303: மௌனம்

நமது நவீனத் தொழில்நுட்ப உலகில் பலர் எதிர்கொள்ளும் ஆபத்துகளில் ஒன்று இடைவிடாத சத்தம்.  நாள் முழுவதும் ஓயாத பேச்சொலிகள் நம்மை எளிதில் சூழ்ந்துகொள்கின்றன.  வானொலி, தொலைக்காட்சி, இணையம் அல்லது மற்றொருவரின் இடைவிடாத உரையாடல் வழியாக அவை வரலாம்.  நமக்கு அரிதாகவே கிடைப்பது ஆழ்ந்த…

சிந்தனை 279: உங்கள் உள்ளார்ந்த உறுதி

உங்கள் ஆன்மாவினுள் எழும் உள்ளார்ந்த உறுதியின் வழியாகக் கடவுள் உங்களிடம் பேசுவதைக் கேட்க நீங்கள் முயல வேண்டும்.  சில வேளைகளில் கடவுளின் குரல் உரக்கவும் தெளிவாகவும் இருப்பதாக நீங்கள் உணரலாம்; வேறு சில வேளைகளில் அது மெல்லியதாகவும் குழப்பமூட்டுவதாகவும் தோன்றலாம்.  கடவுளின் குரலோடு போட்டியிட்டு உங்கள் கவனத்தை ஈர்க்கக்கூடியவை பல உள்ளன…

சிந்தனை 184: அருள்பணியாளர்களின் திருப்பணியில் வெளிப்படும் இரக்கம்

இல்லை, அருள்பணியாளர்கள் குறையற்றவர்கள் அல்ல.  அவர்கள் நாள்தோறும் பாவம் செய்கிறார்கள்.  மனிதகுலத்தின் மற்ற அனைவரையும் போலவே, அவர்களுக்கும் அன்றாட வாழ்வில் மனந்திரும்புதலும் மனமாற்றமும் தொடர்ந்து தேவைப்படுகின்றன.  ஆனால் அவர்கள் அருள்பணியாளர்கள்.  அவர்களது புனித குருத்துவ அருள்பொழிவின் காரணமாக, ஆண்டவர் அவர்கள் வழியாகத் தெளிவான…

சிந்தனை 180: இயேசுவின் திருப்பாடுகள்

நற்செய்திகளை நன்கு அறிந்தவர்களாகிய நாம், சில வேளைகளில், கிறிஸ்துவின் துன்பங்களைக் குறித்து ஒருவித அலட்சிய உணர்வுக்கு ஆளாகலாம்.  ஒவ்வோர் ஆண்டும் அவரது பாடுகளின் வரலாறு வாசிக்கப்படுவதைக் கேட்கிறோம்; அவரது பாடுகளைச் சித்தரிக்கும் பல படங்களையும் பார்த்திருக்கிறோம். இவ்வாறு அவை நமக்குப் பழகிப்போனதால், அவை ஏற்படுத்த வேண்டிய உரிய தாக்கத்தை ஏற்படுத்த நாம் இடமளிக்கத் தவறலாம்…

சிந்தனை 177:  புனிதமான கீழ்ப்படிதல்

கடவுளின் திருவுளத்திற்குப் பதிலாக நமது சொந்த விருப்பத்தின்படி செயல்படுவதிலிருந்து நம்மைக் காக்கும் மிகச் சிறந்த பாதுகாப்புகளில் ஒன்று புனிதமான கீழ்ப்படிதல். துறவற வாழ்வில் இருப்பவர்கள் இதை நேரடியாகவும் வெளிப்படையாகவும் வாழும் பேறு பெற்றவர்கள். வெளிப்புறமான இந்த நடைமுறை தங்கள் உள்ளத்திலும் வேரூன்ற அனுமதிப்பதன் வழியாக, தாங்கள் வாழ்வது…

சிந்தனை 157: அறநெறி சார்ந்த முடிவுகளை எடுத்தல்

அறநெறிப்படி சரியான முடிவை எடுப்பதில் நீங்கள் எப்போதாவது போராடுகிறீர்களா? வீழ்ச்சியுற்ற நமது மனித இயல்பின் விளைவாக இது நிகழ்கிறது. வாழ்க்கையில் நாம் எளிதில் குழப்பமடைகிறோம்; கடவுளின் சிந்தையையும் திருவுளத்தையும் புரிந்துகொள்ளவும் எளிதில் தவறிவிடுகிறோம். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் மனச்சாட்சி ஒரு திருத்தலம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்; அதற்குள்…

சிந்தனை 149: உள்ளார்ந்த தூண்டுதல்கள்

தேவையில் இருப்பவர்களுடன் கடவுளின் இரக்கத்தைப் பகிர்ந்துகொள்ள நம்மைச் சுற்றி எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.  ஆனால் இவ்வாய்ப்புகளைத் தவறவிடுவது மிக எளிது.  இறை இரக்கத்தின் கருவிகளாக நாம் மாறுவதற்கு நம்மையே கையளிக்கும் முதன்மையான வழிகளில் ஒன்று, இடைவிடாமல் கவனமாயிருக்க முயல்வதே…

சிந்தனை 108: திருஅவையின் குரல்

இறைவன் பல உள்ளார்ந்த அருள்கள் மற்றும் தூண்டுதல்கள் உட்படப் பல்வேறு வழிகளில் புனிதர்களிடம் பேசியுள்ளார். ஆனால், புனிதத்தின் உச்சியில் வாழும் மிகச் சிறந்த இறையனுபவமுடையவரும்கூட, இறுதியில் இறைவன் தமது திருஅவையின் வழியாகப் பேசும் குரலுக்குப் பணிந்தாக வேண்டும். திருஅவை, குறிப்பாக…

சிந்தனை 101: பிறர் வழியாகப் பேசும் கடவுள்

நீங்கள் கேட்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட செய்தியைக் கடவுள் உங்களிடம் சொல்ல விரும்புவது அடிக்கடி நிகழ்கிறது.  நீங்கள் மறையுரையைக் கேட்கும்போதோ, ஒரு நூலை வாசிக்கும்போதோ, வானொலியில் ஏதாவது கேட்கும்போதோ, நண்பருடன் பேசும்போதோ, ஏதோ ஒன்று உங்கள் கவனத்தைச் சிறப்பாக ஈர்க்கலாம்; ஆனால் அது தாக்கத்தை ஏற்படுத்தாததுபோல் தோன்றலாம்…

சிந்தனை 50: கடவுளின் குரலைக் கேட்டல்

நாள் முழுவதும் கடவுள் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்பது உண்மை.  அவர் தமது உண்மையையும் உங்கள் வாழ்வுக்கான வழிகாட்டுதலையும் இடைவிடாமல் உங்களுக்குத் தெரிவிக்கிறார்; தமது இரக்கத்தையும் இடைவிடாமல் பொழிகிறார்.  ஆனால், அவரது குரல் மிகவும் மென்மையாகவும் அமைதியாகவும் இருப்பதுதான் சிக்கல்.  ஏன்?  ஏனெனில், அவர் உங்கள் முழுக் கவனத்தையும் விரும்புகிறார்.  அவர்…