தமிழ்

சிந்தனை 111: தீயோனின் பொய்கள்

அலகை நம்மைப் பல வழிகளில் சோதிப்பான். நாம் பாவசங்கீர்த்தனத்தில் அறிக்கையிட்ட பாவங்கள் உட்பட, நம் பாவங்களை நமக்கு நினைவூட்டுவது, நம்மைத் தாக்குவதற்கு அலகை விரும்பிப் பயன்படுத்தும் பொதுவான வழிகளில் ஒன்று. நாம் தவறான பாதையில் செல்கிறோம் என்றும், கடவுளுக்கு உகந்தவர்களாக இல்லை என்றும், பொய்யர்களும் பாவிகளுமாக இருக்கிறோம் என்றும் நம்மை நம்பவைக்க முயல்வதில் அவன் மகிழ்கிறான். மேலும்…

சிந்தனை 105: இறைவன் உள்ளத்தில் குடிகொள்வதன் விளைவுகள்

இறைவன் உங்கள் ஆன்மாவின் ஆழத்தில் முழுமையாகக் குடிகொண்டால், நீங்கள் எதை அனுபவிப்பீர்கள்? அமைதி, மகிழ்ச்சி, வியப்பு! இந்தக் கொடைகளாலும், மூவொரு இறைவன் உங்களுக்குள் குடிகொள்வதாலும், துன்பங்களை எதிர்கொள்ளும் துணிவும், அச்சத்தை விரட்டும் வலிமையும், ஊடுருவ முடியாத பாதுகாப்பும் உங்களுக்குக் கிடைக்கும்…

சிந்தனை 53: செபத்தில் ஏற்படும் இடர்பாடுகள்

அன்றாடம் செபிக்கும் பழக்கத்தை உருவாக்க முயலும்போது, உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற இடர்பாடுகளை நாம் எதிர்கொள்கிறோம்.  உள்ளார்ந்த இடர்பாடுகள்: ஊக்கமின்மை, ஆன்மிக வறட்சி, உள்ளத்தின் பாரம், சோதனைகள்.  பொறுமையாலும் விடாமுயற்சியாலும் இந்த இடர்பாடுகளை மேற்கொள்ளலாம்.  வெளிப்புற…

சிந்தனை 39: ஆன்மிக ஆறுதலை இழத்தல்

நாம் இயேசுவைப் பின்பற்றுவதால், நாம் செய்யும் அனைத்திலும் தொடர்ந்து ஆறுதலும் தேறுதலும் பெற வேண்டும் என்று எண்ணும் கண்ணியில் எளிதாக விழுந்துவிடலாம்.  அது உண்மையா?  ஆம் என்றும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம்.  ஒருவகையில், நாம் எப்போதும் இறைத்திருவுளத்தை நிறைவேற்றி, அதை நிறைவேற்றுகிறோம் என்பதை அறிந்திருந்தால், நமது ஆறுதல் தொடர்ந்திருக்கும்.  எனினும்…

சிந்தனை 28: குறைகூறுவதற்கான சோதனைகள்

சில வேளைகளில் குறைகூறும் சோதனை நமக்கு ஏற்படுகிறது.  கடவுளையும் அவரது நிறைவான அன்பையும் நிறைவான திட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கும் சோதனை ஏற்படும்போது, அது வெறும் சோதனை மட்டுமே என்பதை அறிந்துகொள்ளுங்கள்…

சிந்தனை 364: இறக்கும் நிலையில் இருப்பவர்களுக்காகச் செபம்

உங்கள் நிலைவாழ்வின் மீட்பைப் பொறுத்தவரை, உங்கள் மரண நேரம் மிகவும் முக்கியமானது.  “அருள் நிறைந்த மரியே” என்னும் செபத்தை நீங்கள் செபிக்கும்போது, இந்தப் புனித நேரத்திற்காகவே குறிப்பாகச் செபிக்கிறீர்கள்.  அது ஒரு புனிதமான நேரம்.  ஆனால், தீயவன் மீண்டும் ஒருமுறை உங்களைத் தாக்கி, கவர்ந்துகொள்ள முயலும் நேரமும் அதுவே…

சிந்தனை 360: ஆன்மிகப் போராட்டம்

சோதிப்பவனாகிய சாத்தான் உண்மையிலேயே இருக்கிறான்; ஆனால் அவனுக்கு அஞ்சத் தேவையில்லை. நீங்கள் அவனுக்குச் சிறிதும் கவனம் செலுத்தக் கூடாது. அவனது எண்ணங்களோடு வாதாடக் கூடாது. அவனோடு பேரம் பேசக் கூடாது. சோதனைகளை எதிர்கொள்ளும்போது உங்களுக்குத் துணிவும், இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கையும், எதிர்நோக்கும் இருக்க வேண்டும். ஆகிவிடாதீர்கள்…

சிந்தனை 346: பிறரிடம் உள்ள கொடைகள்

பிறருடைய வாழ்வில் கடவுளின் கொடைகளைக் கண்டுணர்ந்து, அதைக் குறித்து மகிழ்வது, நீங்கள் அவர்களுக்குச் செய்யக்கூடிய ஓர் இரக்கச் செயலாகும். வருந்தத்தக்க வகையில், பிறரைக் குறித்துப் பொறாமைப்படவோ அவர்களுடைய நலனைக் கண்டு மனம் கசக்கவோ அடிக்கடி சோதனை ஏற்படலாம். குறிப்பாக, அவர்களுடைய இயல்பான திறமைகளையோ அவர்களுடைய வாழ்வில் கடவுளின் அருளையோ காணும்போது இவ்வாறு நேரலாம். ஆனால்…

சிந்தனை 340: சோதனைக்கு உட்படுத்தப்படுதல்

சோதனைக்கு உட்படுத்தப்படுவது உடனடியாக இனிமை தராமல் இருக்கலாம்; ஆனால் சில வேளைகளில் அதனால் நாம் பெரிதும் பயனடைகிறோம்.  ஆண்டவர் இதைப் பல்வேறு வழிகளில் அனுமதிக்கிறார்.  சோதனைக்கு உட்படுத்தப்படுவது பாவத்தூண்டுதல் அல்ல; மாறாக, தமது திருவுளத்திற்கு நாம் இன்னும் ஆழமாகப் பணிந்திருக்க நம்மை அழைப்பதற்காக, ஒரு சோதனையை நாம் தாங்கிக்கொள்ள ஆண்டவர் அனுமதிக்கும் ஒரு வழியாகும்.  எப்போது…