தமிழ்

சிந்தனை 21: நீங்கள் அன்புக்குரியவர். இதை நம்புங்கள்.

கிறிஸ்துவால் ஏற்றுக்கொள்ளப்படுவதும், இரக்கமுள்ள அவரது இதயத்தினுள் வாழ்வதும், அவர் உங்களை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதைக் கண்டறிய உங்களை வழிநடத்தும். நீங்கள் கற்பனை செய்யக்கூடியதைவிட அதிகமாகவே அவர் உங்களை அன்பு செய்கிறார். அந்த அன்பைக் கண்டறியத் தொடங்க உங்களை அனுமதியுங்கள். அதைச் சுவையுங்கள், நம்புங்கள், புரிந்துகொள்ளுங்கள்; அதை இன்னும் அதிகமாகத் தேடுங்கள்…

சிந்தனை 20: ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வை இயேசுவுக்கு ஒப்புக்கொடுங்கள்

இயேசு உங்களை ஏற்றுக்கொண்டு, உங்கள் ஆன்மாவைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்ட பின், அடுத்து என்ன நடக்கும் என்று கவலைப்படாதீர்கள்.  உங்கள் வாழ்க்கை உடனடியாகப் பெரிதும் மாறிவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்; ஆனால் அப்படி மாறினாலும் வியப்படையாதீர்கள்.  நீங்கள் நாள்தோறும் உங்களை அவருடைய…

சிந்தனை 19: ஆண்டவர் தமது இரக்கத்தில் உங்களை ஏற்றுக்கொள்கிறார்

நம் தெய்வீக ஆண்டவரை நீங்கள் உண்மையாகவே தேடியிருந்தால், தமது இதயத்திலும் புனித திருவுளத்திலும் உங்களை ஏற்றுக்கொள்வாரா என்று அவரிடம் கேளுங்கள்.  அவரிடம் கேட்டுவிட்டு, அவர் சொல்வதைக் கேளுங்கள்.  அனைத்தையும் ஒப்படைத்து, உங்களையே அவருக்கு அர்ப்பணித்திருந்தால், உங்களை ஏற்றுக்கொள்வதாக அவர் உங்களுக்குப் பதிலளிப்பார்.  ஒருமுறை…

சிந்தனை 18: குருக்கள் வழியாக வழங்கப்படும் இரக்கம்

இரக்கம் பல வழிகளில் வழங்கப்படுகிறது. இரக்கம் கிடைக்கும் பல வழிகளுள், கடவுளின் புனித குருக்கள் வழியாக அதை நாடுங்கள். அவருடைய குரு நீங்கள் சொல்வதைக் கேட்கவும், உங்களிடம் பேசவும், உங்களை வழிநடத்தவும் இடமளியுங்கள். குருக்கள் பலவீனமானவர்கள்; பாவிகளும்கூட. ஆயினும், அவர்களுடைய பலவீனத்தில் ஆன்மாக்களை வழிநடத்த அவர்களுக்குச் சிறப்பு அருள் வழங்கப்படுகிறது. அந்த…

சிந்தனை 17: செபத்தில் நம் புனித அன்னையை நாடுங்கள்

நம்பிக்கையுடன் செபத்தில் நம் புனித அன்னையை நாடுங்கள். அவர் உங்களைத் தமது மாசற்ற திருஇதயத்திற்கு அருகில் அணைத்துக்கொண்டு, தம் மகனாகிய இயேசுவிடம் வழிநடத்துவார். அவரே நிறைவான அன்னை, அனைத்து அருள்களின் அன்னை. அவரது தாயன்பு நிறைந்த பராமரிப்பிலும் பரிந்துரையிலும் நம்பிக்கை வையுங்கள். அருள்களைத் திறந்து வழங்குவது எப்படி என்பதை அவர் அறிவார்…

சிந்தனை 16: கடவுளிடம் நம்மை முழுமையாகக் கையளித்தல்

கடவுளின் திருமுன் விழுங்கள். அவர் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குங்கள். உங்களால் முடிந்தால், உடலளவிலும் அவ்வாறு செய்யுங்கள். அது மற்றவர்களின் கவனத்தைச் சிதறடிக்குமென்றால், உள்ளத்தில் அவ்வாறு செய்யுங்கள். கடவுளின் திருமுன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவரது இறை இரக்கத்தையும் அதிதூய திருவுளத்தையும் உங்களுக்கு வெளிப்படுத்துமாறு அவரிடம் மன்றாடுங்கள்.  வாழ்வில் பல வேளைகளில்…

சிந்தனை 15: இறைவனின் அன்பு ஓயாதது

இறைவனுக்குச் செவிசாய்ப்பதைத் தள்ளிப்போடுகிறீர்களா? அவர் தொடர்ந்து விடுக்கும் அழைப்பைப் புறக்கணிக்கிறீர்களா? எண்ணற்ற கவனச்சிதறல்களால் அவரது குரல் கேட்காதபடி செய்கிறீர்களா? இறைவன் உங்களை அழைப்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவருக்குச் செவிசாயுங்கள். சில நேரங்களில் நாம் இறைவனுக்குச் செவிசாய்ப்பதைத் தள்ளிப்போடுகிறோம்; ஏனெனில், வாழ்வில் மனநிறைவு தரும் என்று நாம் தவறாகக் கருதுவது வேறு ஏதோ…

சிந்தனை 14: இரக்கத்தின் வழியாக மட்டுமே உண்மையான நிறைவு

வாழ்வில் எத்தனையோ முறை, நிலையற்ற உலகப் பொருள்களிலிருந்து நிறைவைத் தேடுகிறோம். செல்வமோ, உடல் இன்பமோ, மதிப்பும் புகழுமோ, வேறு எதுவாக இருந்தாலும், ஒன்றே ஒன்று மட்டுமே நிறைவு தருகிறது என்பதை நாம் கண்டுணர வேண்டும். இறைவனின் இரக்கத்தையே நாம் தேடுகிறோம். மற்ற அனைத்தும் மாயையே…

சிந்தனை 13: மௌனத்தின் நடுவே ஓர் அழைப்பு

நம் ஆன்மாவினுள் கடவுள் பேசுவதைக் கேட்க நாம் முயல வேண்டும். அவர் மௌனத்திலும் ஆழத்திலும் பேசுகிறார். முதலில், அவர் ஓர் அழைப்பை விடுக்கிறார். அவரை அறிந்துகொள்ளவும், அவரது இதயத்திலிருந்து பெருக்கெடுத்து வரும் இறை இரக்கத்தைச் சந்திக்கவும் அழைக்கிறார். அந்த அழைப்பு ஓர் அழைப்பு மட்டுமே. இயேசு…

சிந்தனை 12: உங்கள் ஆன்மாவில் மூவொரு இறைவனை ஆராதித்தல்

அதிபுனித மூவொரு இறைவனை ஆராதிப்பதும் நேசிப்பதும் முதலில் நம் ஆன்மாவுக்குள்ளேயே நிகழ்கின்றன. நம் ஒவ்வொருவரின் உள்ளத்தின் ஆழத்திலும், தம்மை ஆராதிக்கக் கடவுள் அழைப்பு விடுக்கிறார். அங்குதான்…