தமிழ்

சிந்தனை 71: நமது சிறுமையும் ஒன்றுமில்லாமையும்

நாம் உண்மையில் எந்நிலையில் இருக்கிறோமோ அந்நிலையிலேயே நம்மைக் காண்பது கடவுள் தரும் அருள்.  இவ்வாறு நம்மைக் கண்டால் நாம் எதைக் காண்போம்?  நமது அவலநிலையையும் ஒன்றுமில்லாமையையும் காண்போம்.  தொடக்கத்தில், இது அவ்வளவு விரும்பத்தக்கதாக இருக்காது.  கிறிஸ்துவில் நமக்குள்ள மாண்புக்கு இது முரணாகக்கூடத் தோன்றலாம்.  ஆனால் அதுவே திறவுகோல்.  நமது…

சிந்தனை 70: துன்புறும் கிறிஸ்துவோடு நம்மை ஒன்றித்துக் காணுதல்

கிறிஸ்துவின் எந்த உருவம் உங்களுக்கு அதிக நெருக்கமாகத் தோன்றுகிறது? எந்த உருவத்தோடு உங்களை எளிதாக ஒன்றித்துக் காண முடிகிறது? அனைத்திற்கும் அரசராக மாட்சிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவின் உருவத்தோடா? அல்லது அடிபட்டுத் துன்புறும் கிறிஸ்துவின் உருவத்தோடா? இறுதியில், மாட்சியிலும் மகிமையிலும் விளங்கும் ஆண்டவர்மீது நம் கண்களைப் பதிப்போம்; இதுவே…

சிந்தனை 69: போராட்டங்கள் நம்மைச் சந்தேகிக்கத் தூண்டுகின்றன

நாம் அனைவரும் வாழ்வில் போராட்டங்களைச் சந்திக்கிறோம். கேள்வி இதுதான்: “அவற்றை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?” போராட்டங்கள் நம் வாழ்வில் வரும்போது, கடவுள் நம்முடன் இருப்பதையும் அவரது இரக்கமுள்ள உதவியையும் சந்தேகிக்க நாம் அடிக்கடி தூண்டப்படுகிறோம். உண்மையில், இதற்கு நேர்மாறானதே உண்மை. ஒவ்வொரு போராட்டத்திற்கும் கடவுளே விடை. அவர்…

சிந்தனை 68: பிறருடைய நன்மையில் மகிழ்தல்

பிறர் நன்றாகச் செயல்படும்போது நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்?  ஒரு குழந்தை நன்றாகச் செயல்படும்போது பெரும்பாலும் உங்கள் உள்ளம் மகிழ்ச்சியடைகிறது.  ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரை எப்படி?  பிறர் செய்யும் நன்மையில் மனமார மகிழக்கூடிய திறன், இரக்கமுள்ள இதயத்தின் உறுதியான அடையாளமாகும்.  பல வேளைகளில் பொறாமையும் அழுக்காறும் இவ்வகையான…

சிந்தனை 67: மறைந்திருக்கும் அன்பின் ரோஜாக்கள்

சில அன்புச் செயல்கள் அன்புகூரும் இருவருக்கிடையே மட்டுமே பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவை. ஆழ்ந்த நெருக்கத்தையும் தன்னையே கையளிப்பதையும் வெளிப்படுத்தும் செயல்கள், அன்புறவின் மறைவில் பகிர்ந்துகொள்ளப்படும் விலைமதிப்பற்ற அன்பளிப்புகள். கடவுள்மீது நாம் கொண்டுள்ள அன்புக்கும் இது பொருந்தும். நமது மிக ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்துவதற்கான வழிகளை நாம் தொடர்ந்து தேட வேண்டும்…

தியானம் 66: இரக்கத்தின் வழியாக நீதி

சிலர் நாள்தோறும் மற்றொருவரின் கடுமையையும் கொடுமையையும் அனுபவிக்கிறார்கள்.  இது மிகுந்த வேதனை தருகிறது.  இதனால், வேதனை ஏற்படுத்துபவர் தம் செயல்களுக்குப் பொறுப்பேற்கும்படி நீதி கிடைக்க வேண்டும் என்ற வலுவான விருப்பம் எழலாம்.  ஆனால் உண்மையான கேள்வி இதுதான்: ஆண்டவர் என்னை என்ன செய்ய அழைக்கிறார்?  நான் எவ்வாறு…

சிந்தனை 65: இயேசு, என் எஜமான்

இயேசுவை உங்கள் எஜமான் என்று அழைப்பதில் உங்களுக்குத் தயக்கம் இல்லையா?  சிலர் அவரை “நண்பர்” அல்லது “ஆயர்” என்று அழைக்க விரும்பலாம்.  இந்தப் பெயர்களும் உண்மையானவையே.  ஆனால் எஜமான் என்று அழைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  நம் ஆண்டவரை நம் வாழ்வின் எஜமானாக ஏற்று, நம்மையே அவருக்கு ஒப்படைக்கும் நிலைக்கு நாம் அனைவரும் வர வேண்டும்.  நாம் பணியாளர்களாக மாறுவது மட்டுமல்ல…

சிந்தனை 64: கடவுளின் குரலைக் கேட்டல்

நீங்கள் ஆலயத்தில் இருக்கும்போது செவிசாய்க்கிறீர்களா?  குறிப்பாக, கடவுளின் குரலுக்குச் செவிசாய்க்கிறீர்களா?  பல வேளைகளில் நாம் அமர்ந்து மறையுரையைக் கேட்கும்போது, நம் மனம் அலைபாய்கிறது; சொல்லப்பட்ட அனைத்தையும் அல்லது பெரும்பாலானவற்றையும் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.  உங்கள் மனம் எங்கெல்லாம் அலைபாய்கிறது?  உண்மை என்னவென்றால், சில வேளைகளில் அலைபாயும்…

சிந்தனை 63: நீங்கள் பிறரிடம் எப்படிப் பேசுகிறீர்கள்?

பிறரிடம் பேசும்போது, கடவுளின் அன்பும் இரக்கமும் நம் உதடுகளிலிருந்து பொழிய வேண்டும்.  ஆனால் எப்படி?  நமது பேச்சு எவ்வாறு இருக்க வேண்டும்?  நாம் கடவுளிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதன் ஒளியில், பிறரிடம் பேசும் விதத்தை ஆராய்வது ஒரு வழியாகும்.  கடவுளிடம் பேசும்போது நாம் நேர்மையுடன் பேச வேண்டும்…

சிந்தனை 62: வாழ்வின் சிறு தியாகங்கள்

சிறு தியாகங்கள் முக்கியமானவையா?  சில வேளைகளில், பெரிய செயல்களைச் செய்ய நாம் முயல வேண்டும் என்று நினைக்கலாம்.  சிலர் பிரம்மாண்டமான எண்ணங்களுடன், பெரும் சாதனைகளைப் புரியக் கனவு காணலாம்.  ஆனால், நாம் அன்றாடம் ஒரே மாதிரியாகச் செய்துவரும் சிறு தியாகங்கள் பற்றி என்ன சொல்வது?  சுத்தம் செய்வது போன்ற தியாகங்கள்…