தமிழ்

சிந்தனை 81: வல்லமையும் இரக்கமும்

முழு அதிகாரம் கொண்ட ஒரு நாட்டின் சர்வாதிகாரியைக் கற்பனை செய்து பாருங்கள். அவர் மிகுந்த கோபமும், தீய எண்ணமும், பழிவாங்கும் குணமும் கொண்டவர். இப்படிப்பட்ட ஒருவரைக் கோபப்படுத்த நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இப்போது இதற்கு நேர்மாறான ஒருவரைக் கற்பனை செய்து பாருங்கள். முழு அதிகாரம் கொண்ட அவருக்கு அருளப்பெற்ற இதயமோ தூய…

சிந்தனை 80: நமது இறப்பின் வேளையில்

“அருள் நிறைந்த மரியே” என்னும் செபத்தை நீங்கள் செபித்திருந்தால், இவ்வுலகில் உங்கள் இறுதி வேளைக்காகவும் செபித்திருக்கிறீர்கள்: “இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.”  மரணம் பலருக்கு அச்சமூட்டுகிறது; நமது இறப்பின் வேளையைப் பற்றி நாம் பொதுவாகச் சிந்திக்க விரும்புவதில்லை.  ஆனால்…

சிந்தனை 79: நம் பேறுபெற்ற வியாகுல அன்னை

அன்னை மரியா தம் வாழ்வில் எவ்வளவோ துன்பங்களைத் தாங்கிக்கொண்டார்.  தம் மீட்பரை அற்புதமாகக் கருத்தரித்தபோது, பிறரது சந்தேகங்களையும் ஏளனத்தையும் தாங்கிக்கொண்டார்.  தம் இறைமகன் புறக்கணிக்கப்பட்டதையும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதையும் நிறைவான தாயன்புடன் கண்டார்.  அவரது மரண வேதனையிலும் இறப்பிலும் அவருக்குத் துணை நின்றார்.  இவை அனைத்தின் ஊடாகவும்…

சிந்தனை 78: மகிழ்ச்சிக்கான விருப்பம்

நமது மிக அடிப்படையான விருப்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே.  நாம் செய்யும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இந்த இலக்கை அடைய நமக்கு உதவுவதற்காகவே செய்யப்படுகின்றன.  பாவம்கூட நம்மை மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்ற தவறான எண்ணத்தில்தான் செய்யப்படுகிறது.  ஆனால் மனித வாழ்வின் நிறைவுக்கு ஒரே ஓர் ஊற்றும், ஒரே ஓர் ஊற்றும்…

சிந்தனை 77: ஆண்டவர் அனைத்தையும் அறிவார்

நம் இறைவனாகிய ஆண்டவர் அனைத்தையும் அறிவார் என்பது முற்றிலும் உறுதியானது.  நமது ஒவ்வோர் எண்ணத்தையும், நமக்குள்ள ஒவ்வொரு தேவையையும், நம்மால் உணர முடிவதைவிட மிக ஆழமாக அவர் அறிந்திருக்கிறார்.  சில வேளைகளில், அவரது நிறைவான அறிவை நாம் உணரும்போது, நம் தேவைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார் என நாம் எதிர்பார்க்கலாம்; நாம் … என்றாலும்கூட…

சிந்தனை 76: அநீதியான குற்றச்சாட்டுகள்

பிறர் தங்கள்மீது அநீதியாகக் குற்றம் சுமத்திய அனுபவம் ஒருவேளை எல்லாருக்கும் இருந்திருக்கலாம்.  உண்மை நிலவரத்தையோ, நாம் செய்வதற்குப் பின்னுள்ள நோக்கத்தையோ ஒருவர் எவ்விதத் தீய நோக்கமும் இன்றித் தவறாகப் புரிந்துகொண்டதால் இவ்வாறு நேரலாம்.  அல்லது, அது அதிகத் தீய நோக்கமும் கொடூரமும் கொண்டதாக இருக்கலாம்.  பொய்யாகக் குற்றம் சாட்டப்படுவது மிகுந்த வேதனையைத் தரக்கூடும்; மேலும்…

சிந்தனை 75: பிறரில் கிறிஸ்துவைச் சந்தித்தல்

திவ்விய நற்கருணை உண்மையிலேயே புனிதமானது. அதற்கு வணக்கம் செலுத்தப்பட்டு, மிகுந்த மரியாதையுடன் அது கையாளப்படுகிறது. நம் ஆண்டவரை நாம் ஒருபோதும் தூக்கி எறியவோ, தரையிலோ மரியாதைக்குப் பொருந்தாத வேறோர் இடத்திலோ விட்டுவிடவோ மாட்டோம். ஆயினும், இயேசுவிடம் காட்டும் அதே மரியாதையுடன் பிறரை நடத்த நாம் அடிக்கடி தவறுகிறோம்…

சிந்தனை 74: பரிவுள்ள இதயம்

“அனுதாபம்” என்பதற்கும் “பரிவு” என்பதற்கும் வேறுபாடு உண்டா? அப்படியானால், அந்த வேறுபாடு என்ன? இவற்றில் எது அதிகம் விரும்பத்தக்கது? அனுதாபம் என்பது பிறருக்காக நாம் வருந்துவதை மட்டுமே குறிக்கிறது. ஒருவகையில், நாம் அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம் என்பதே அதன் பொருள். ஆனால் பரிவு அதையும் வெகுவாகக் கடந்து செல்கிறது. அதன் பொருள், நாம்…

சிந்தனை 73: இயேசுவுக்கான நமது ஏக்கத்தில் வளர்தல்

இயேசுவை நாம் எவ்வளவு அதிகமாக அறிந்துகொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அவருக்காக ஏங்குகிறோம்.  அவருக்காக நாம் எவ்வளவு அதிகமாக ஏங்குகிறோமோ, அவ்வளவு அதிகமாக அவரை அறிந்துகொள்கிறோம்.  அறிந்துகொள்வதும் ஏங்குவதும், ஏங்குவதும் அறிந்துகொள்வதுமாகத் தொடர்ந்து நிகழும் ஓர் அழகிய அனுபவம் இது (காண்க: நாட்குறிப்பு #273)…

சிந்தனை 72: புரிந்துகொள்ள இயலாத ஒரு மறைபொருள்

கடவுள் உங்கள் ஆன்மாவிற்குள் வரும்போது, அவரது செயல்பாடுகளை உங்களால் ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத வகையில் அவர் செயல்படுகிறார்.  அவரது அருளும் இரக்கமும் கடல்களைவிட ஆழமான, பிரபஞ்சத்தின் உச்ச எல்லைகளைவிட விரிந்த ஒரு மறைபொருளாகவே விளங்குகின்றன.  புரிந்துகொள்ள இயலாத தன்மையைப் புரிந்துகொள்வது…