தமிழ்

சிந்தனை 102: கடவுள் வலுவற்றோரைப் பயன்படுத்துகிறார்

நீங்கள் கடவுளாக இருந்து, மாட்சிமைமிக்க ஒரு பணியை நிறைவேற்ற விரும்பினால், யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? வெளிப்படையாகத் தெரியும் திறமைகளைக் கொண்ட ஒருவரையா? அல்லது வலுவற்றவராகவும் தாழ்ச்சியுள்ளவராகவும், இயல்பான திறமைகள் மிகக் குறைவாகவே உள்ளவராகவும் தோன்றும் ஒருவரையா? வியப்புக்குரிய வகையில், கடவுள் பெரும்பாலும் வலுவற்றோரையே தேர்ந்தெடுக்கிறார்…

மேலும் படிக்க

சிந்தனை 101: பிறர் வழியாகப் பேசும் கடவுள்

நீங்கள் கேட்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட செய்தியைக் கடவுள் உங்களிடம் சொல்ல விரும்புவது அடிக்கடி நிகழ்கிறது.  நீங்கள் மறையுரையைக் கேட்கும்போதோ, ஒரு நூலை வாசிக்கும்போதோ, வானொலியில் ஏதாவது கேட்கும்போதோ, நண்பருடன் பேசும்போதோ, ஏதோ ஒன்று உங்கள் கவனத்தைச் சிறப்பாக ஈர்க்கலாம்; ஆனால் அது தாக்கத்தை ஏற்படுத்தாததுபோல் தோன்றலாம்…

மேலும் படிக்க

சிந்தனை 100: நன்மையை நாடும் விருப்பம்

நாம் கடவுளுக்கும் பிறருக்கும் காட்டும் அன்புக்காகக் கடவுள் நம்மைப் பார்த்துப் புன்னகைத்து, நமக்கு அளவின்றிக் கைம்மாறு அளிக்கிறார்.  அவரது அருளால் தூண்டப்படும் நம் அன்புச் செயல்கள் விண்ணகத்தில் செல்வங்களாக மாற்றப்படுகின்றன.  ஆனால், செல்வங்களாக மாற்றப்படுவது இவை மட்டுமல்ல.  நன்மை செய்ய வேண்டுமென்ற நம் விருப்பம்கூட…

மேலும் படிக்க

சிந்தனை 99: பாவத்தின் சாட்டையடி

இயேசு ஏன் அத்தகைய துன்பங்களை அனுபவித்தார்?  அவர் ஏன் அவ்வளவு கொடூரமாகச் சாட்டையால் அடிக்கப்பட்டார்?  அவரது மரணம் ஏன் அவ்வளவு வேதனைமிக்கதாக இருந்தது?  ஏனெனில் பாவத்திற்கு விளைவுகள் உண்டு; அது பெருந்துன்பத்திற்கு ஊற்றாக இருக்கிறது.  ஆனால் இயேசு தாமாக முன்வந்து, பாவமற்றவராகத் துன்பத்தை ஏற்றுக்கொண்டது மாற்றியமைத்தது…

மேலும் படிக்க

சிந்தனை 98: கருவியாக இருத்தல்

ஒரு பணியை நிறைவேற்றக் கடவுள் நம்மை அழைக்கும்போது, செயலாற்றுவது யார்? கடவுளா, நாமா? உண்மையில், கடவுளும் நாமும் செயலாற்றுகிறோம்; கடவுளே ஊற்று, நாமோ கருவி. நாம் நமது சுதந்திர விருப்பத்துடன் முயற்சி செய்கிறோம்; ஆனால் நம் வழியாக ஒளிர்பவர் கடவுளே. ஒரு சன்னல் வீட்டில் ஒளியின் ஊற்றாகச் செயல்படுவதுபோல…

மேலும் படிக்க

சிந்தனை 97: நமது பலவீனம் என்னும் “சாக்குப்போக்கு”

அடிப்படையிலிருந்து ஒரு ராக்கெட் விண்கலத்தை உருவாக்குமாறு உங்களிடம் கேட்டால், இந்தத் துறையில் உங்களுக்குத் திறமை இல்லை என்றும், ஆகவே உங்களிடம் கேட்கப்படுவதை உங்களால் செய்ய முடியாது என்றும் கூறி நீங்கள் மறுக்கலாம்.  கடவுளின் திருவுளத்தைப் பொறுத்தவரையில், நாமும் அடிக்கடி அவரிடம் இவ்வாறே பதிலளிக்கிறோம்.  நாம் எளிதில் இவ்வாறு உணரக்கூடும்…

மேலும் படிக்க

சிந்தனை 96: உங்களுக்காகக் கடவுள் வைத்திருக்கும் மாபெரும் திட்டம்

நாம் அனைவருமே சில நேரங்களில் பெருமையும் புகழும் பெறுவதைக் குறித்துக் கனவு காணலாம்.  நான் செல்வமும் புகழும் பெற்றவராக இருந்தால் எப்படி இருக்கும்?  இவ்வுலகில் எனக்குப் பெரும் அதிகாரம் இருந்தால் எப்படி இருக்கும்?  நான் திருத்தந்தையாகவோ குடியரசுத் தலைவராகவோ இருந்தால் எப்படி இருக்கும்?  ஆனால், நமக்காகக் கடவுள் உண்மையிலேயே மேன்மையானவற்றைத் தம் மனத்தில் கொண்டிருக்கிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.  அவர் நம்மை ஓர் உன்னத நிலைக்கு அழைக்கிறார்…

மேலும் படிக்க

சிந்தனை 95: கடவுளின் இரக்கத்தில் நம்பிக்கை வைத்தல்

பரந்து விரிந்த கடலின் நடுவில் நீங்கள் ஒரு பொருளைப் போட்டால், அது நனையும் என்பதை ஆழ்ந்த உறுதியுடன் அறிவீர்கள்.  கடலின் பரந்த நீர்ப்பரப்பு அதை முழுமையாக மூழ்கடித்துவிடும்.  கடவுளின் இரக்கமும் அப்படித்தான்.  அது அளப்பரியது, எல்லையற்றது.  எனவே, நீங்கள் நம்பிக்கை வைத்தால்…

மேலும் படிக்க

சிந்தனை 94: தீயவனை எதிர்கொள்ளுதல்

தீயவனின் கடுமையான வெறுப்பைத் தவிர்க்க நீங்கள் விரும்பினால், புனித வாழ்வுக்காக முயல்வதை விட்டுவிடுங்கள்.  சாத்தான் அப்போதும் உங்களை வெறுப்பான்; ஆனால் ஒரு புனிதரை வெறுக்கும் அளவுக்கு உங்களை வெறுக்கமாட்டான்.  ஆனால், இது நிச்சயமாக அறிவீனமே!  வெறுப்பைத் தவிர்ப்பதற்காக ஒருவர் ஏன் புனித வாழ்வைத் தவிர்க்க வேண்டும்…

மேலும் படிக்க

சிந்தனை 93: அன்பும் பாவமும் சந்திக்கும் தருணம்

அன்பும் பாவமும் எங்கே சந்திக்கின்றன?  நம் ஆண்டவருக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலிலும் ஏளனத்திலும் தீய செயல்களிலும் அவை சந்திக்கின்றன.  அவர் நிறைவான அன்பின் அவதாரமாக இருந்தார்.  அவரது இதயத்தில் இருந்த இரக்கம் எல்லையற்றதாக இருந்தது.  மக்கள் அனைவர்மீதும் அவர் கொண்டிருந்த அக்கறையும் பரிவும் கற்பனைக்கு எட்டாதவை.  இருந்தும் படைவீரர்கள் அவரை ஏளனம் செய்தனர்…

மேலும் படிக்க