தமிழ்

சிந்தனை 42: அநீதியாக நடத்தப்படுவதைப் பாவப்பரிகாரமாக ஒப்புக்கொடுத்தல்

வாழ்வில் பல வேளைகளில் நாம் அநீதியாக நடத்தப்படுகிறோம். அப்போது எதிர்த்துப் போராடுவதும், நம்மைத் தற்காத்துக்கொள்வதும், நீதி கிடைப்பதை உறுதிசெய்வதுமே நமது முதல் உந்துதலாக இருக்கிறது. ஆனால் இயேசு அப்படித்தான் செய்தாரா? இல்லை, அவர் அமைதியாக இருந்து, எல்லா அநீதிகளையும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் பலியாக ஏற்றுக்கொண்டார். அவரே…

சிந்தனை 40: நம் ஆண்டவரின் இதயத்தினுள் நுழைதல்

ஒரு தூசுத் துகளோ ஒரு மணல் துகளோ பெரும்பாலான சூழல்களில் அவ்வளவாகப் பொருட்படுத்தப்படுவதில்லை.  முற்றத்திலோ, வீட்டின் தரையில்கூடவோ கிடக்கும் ஒரு தூசுத் துகளையோ மணல் துகளையோ யாரும் கவனிப்பதில்லை.  ஆனால் இவற்றில் ஏதேனும் ஒன்று கண்ணுக்குள் நுழைந்துவிட்டால், அந்தத் துகள் உடனடியாக நம் கவனத்திற்கு வருகிறது.  ஏன்?  ஏனெனில்…

சிந்தனை 39: ஆன்மிக ஆறுதலை இழத்தல்

நாம் இயேசுவைப் பின்பற்றுவதால், நாம் செய்யும் அனைத்திலும் தொடர்ந்து ஆறுதலும் தேறுதலும் பெற வேண்டும் என்று எண்ணும் கண்ணியில் எளிதாக விழுந்துவிடலாம்.  அது உண்மையா?  ஆம் என்றும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம்.  ஒருவகையில், நாம் எப்போதும் இறைத்திருவுளத்தை நிறைவேற்றி, அதை நிறைவேற்றுகிறோம் என்பதை அறிந்திருந்தால், நமது ஆறுதல் தொடர்ந்திருக்கும்.  எனினும்…

சிந்தனை 38: நமது அன்றாடக் கடமை

தங்கள் வாழ்க்கை சுவையற்றதாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதாகச் சிலர் உணரலாம்.  நாள்தோறும் அதே செயல்கள்தான். சில நேரங்களில் புதிய உற்சாகத்தையும் அனுபவத்தையும் நாம் தேடுகிறோம்.  ஆனால், வாழ்வின் எளிமையான, மீண்டும் மீண்டும் நிகழும், ஒரே மாதிரியான அம்சங்கள் அனைத்திலும், ஒவ்வொரு நாளும் இறையருள் நம்முடன் துணைவர அனுமதித்தால்…

சிந்தனை 37: தாழ்ச்சி, எளிமை, நேர்மை

இன்று சிந்திப்பதற்கு மூன்று சொற்கள் உள்ளன: தாழ்ச்சி, எளிமை, நேர்மை.  தாழ்ச்சியுள்ள ஆன்மாக்கள் தங்கள் தேவைகளில் தங்களையே சார்ந்திருப்பதில்லை என்பதால், இறைவனைக் கண்டு அறிகின்றன.  இறைவனே எல்லாம் என்பதையும், அவரின்றித் தாங்கள் ஒன்றுமில்லை என்பதையும் அவை உணர்கின்றன.  எளிமையான ஆன்மாக்கள் சிக்கிக்கொள்வதில்லை…

சிந்தனை 36: ஆன்மிக நட்பின் இரக்கம்

சில வேளைகளில் வாழ்க்கை கடினமாக இருப்பதாக உணர்கிறோம்.  நமது ஆன்மிக வாழ்வு வறண்டதாகவோ தாங்க முடியாததாகவோ தோன்றலாம்.  நமது பாவங்களை மேற்கொள்வது நம்மால் இயலாததாகத் தோன்றலாம்.  கடவுளோடு நமக்குள்ள உறவை வளர்ப்பதும் மிகவும் கடினமாகத் தோன்றலாம்.  ஆனால் இந்த அனுபவங்கள் அனைத்தும் அருள்கொடைகளே; அவை…

சிந்தனை 34: கடவுளில் மட்டுமே நிறைவு

வாழ்வில் பல வேளைகளில், உலகத்திற்குரிய நிலையற்ற பொருள்கள் நமக்கு நிறைவு தருகின்றன என்று நம்பும் கண்ணியில் நாம் விழக்கூடும். நம் பாவங்களே நமக்கு நிறைவு தருகின்றன என்று எண்ணி நாம் ஏமாந்துபோகவும் கூடும். விந்தையாக, அவை ஒருவகையான தற்காலிக நிறைவைத் தரத்தான் செய்கின்றன. ஆனால் இந்த “நிறைவு”…

சிந்தனை 30: கடவுளுக்குக் கீழ்ப்படிதல்

புனித வாழ்வுக்கு ஒரு திறவுகோல் கீழ்ப்படிதல். ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமையால் அருள்நிலையை இழந்தனர்; கீழ்ப்படிதலால் நாம் மீண்டும் அருள்நிலைக்குக் கொண்டுவரப்படுகிறோம். கீழ்ப்படிதல் கடினமாக இருக்கலாம்; அதற்கு ஆழமான உள்ளார்ந்த முடிவு தேவை. இயேசுவுக்குக் கீழ்ப்படிவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள், குறிப்பாக நீங்கள்…

சிந்தனை 24: உங்கள் ஆன்மாவின் தூய்மையாக்கம்

நாம் அனுபவிக்கக்கூடிய மிகப்பெரிய துன்பம், கடவுளுக்காக ஆன்மா ஏங்குவதே.  உத்தரிக்கும் நிலையில் இருப்பவர்கள் கடவுளுக்காக ஏங்குவதாலும், அவரை இன்னும் முழுமையாக அடையாததாலும் பெரிதும் துன்புறுகிறார்கள்.  அதே தூய்மையாக்கத்திற்குள் நாமும் இங்கேயே, இப்போதே நுழைய வேண்டும்.  கடவுளுக்காக ஏங்குவதற்கு நாம் நம்மையே அனுமதிக்க வேண்டும்.  நாம்…

சிந்தனை 18: குருக்கள் வழியாக வழங்கப்படும் இரக்கம்

இரக்கம் பல வழிகளில் வழங்கப்படுகிறது. இரக்கம் கிடைக்கும் பல வழிகளுள், கடவுளின் புனித குருக்கள் வழியாக அதை நாடுங்கள். அவருடைய குரு நீங்கள் சொல்வதைக் கேட்கவும், உங்களிடம் பேசவும், உங்களை வழிநடத்தவும் இடமளியுங்கள். குருக்கள் பலவீனமானவர்கள்; பாவிகளும்கூட. ஆயினும், அவர்களுடைய பலவீனத்தில் ஆன்மாக்களை வழிநடத்த அவர்களுக்குச் சிறப்பு அருள் வழங்கப்படுகிறது. அந்த…