தமிழ்

சிந்தனை 91: பிறருக்காகச் செபிப்பது கதவைத் திறக்கிறது

மற்றொருவருக்கு உண்மையில் என்ன தேவை என்பதைக் கடவுள் மட்டுமே அறிவார்.  கடவுள் இந்தச் சிறப்பு அருளை நமக்குக் கொடுத்தாலன்றி, மற்றொருவரின் ஆன்மாவை நம்மால் அறிந்துகொள்ள முடியாது.  ஆனால், பிறருக்காக உருக்கமாகச் செபிக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.  சில வேளைகளில், நாம் திறந்த மனத்துடன் இருந்தால், உருக்கமாகச் செபிக்க வேண்டிய தேவையைக் கடவுள் நம் உள்ளத்தில் பதிப்பார்…

சிந்தனை 90: அனைவருடனும் ஒன்றிப்பு

நாம் ஒருவரோடு ஒருவர் ஒன்றித்து வாழ்வதற்காகப் படைக்கப்பட்டுள்ளோம். ஒன்றிப்பு குறையும்போது, அதன் விளைவுகள் குடும்பங்களிலும் சமூகங்களிலும் நாடுகளுக்கிடையிலும் உணரப்படுகின்றன. மற்ற எல்லாவற்றையும்விட நம்மை ஒன்றிணைப்பது எது? எல்லாவற்றிற்கும் முதன்மையாக, நாம் நமது… வழியாகப் பிற ஆன்மாக்களுடன் ஒன்றித்திருக்கிறோம்.

சிந்தனை 89: தாராளமான அன்பின் வல்லமை

நமது செபங்களும் இறைவனின் இரக்கமும் தேவைப்படும் ஆன்மாக்கள் ஏராளமாக உள்ளனர்.  இவர்கள் தங்கள் பாவத்தில் உறுதியாகப் பிடிபட்டிருக்கும் ஆன்மாக்கள்.  நாம் அவர்களுக்காகச் செபித்தாலும், அதனால் பெரிதாகப் பயன் ஏற்படுவதில்லை எனத் தோன்றுகிறது.  நாம் இன்னும் என்ன செய்யலாம்?  சில வேளைகளில், நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த பரிந்துரை மன்றாட்டு…

சிந்தனை 88: உருமாற்றம் பெற்ற உள்ளார்ந்த துன்பம்

பலர் தங்கள் ஆன்மாவில் மிகக் கனமான சுமைகளைச் சுமக்கிறார்கள்.  வெளிப்பார்வைக்கு அவர்கள் மகிழ்ச்சியும் அமைதியும் பொங்கத் தோன்றலாம்.  ஆனால் அவர்களுடைய ஆன்மாவுக்குள் பெரும் வலியும் இருக்கலாம்.  நாம் கிறிஸ்துவைப் பின்பற்றும்போது, நமது அகத்திலும் புறத்திலும் உள்ள இந்த இரு அனுபவங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.  பல வேளைகளில்…

சிந்தனை 87: எல்லாவற்றிலும் இறைவனின் திருவுளம்

உங்களால் எப்போதும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!  எல்லாவற்றிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் இறைவனுக்கு முழுமையாக “ஆம்” என்று சொல்லும் முடிவை உங்களால் எளிதாக எடுக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!  உண்மையில் உங்களால் முடியும்.  இந்த முழுமையான முடிவை நீங்கள் எடுக்கத் தடையாக இருப்பது உங்களுடைய பிடிவாதமான…

சிந்தனை 86: மிகக் கடினமான இதயங்களையும் உருகச் செய்தல்

ஒரு பெரிய பனிக்கட்டியை கற்பனை செய்துகொள்ளுங்கள்.  இப்போது அந்தப் பனிக்கட்டியின் நடுவில் விலைமதிப்புமிக்க ஒரு நாணயம் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.  அந்த நாணயத்தைப் பெற வேண்டுமானால், பனிக்கட்டி உருக வேண்டும்.  நம் இதயங்களும் இப்படித்தான் இருக்கலாம்.  சிலருடைய இதயங்கள் காலப்போக்கில் மிகவும் கடினமாகிவிட்டதால், மிகக் குறைந்த…

சிந்தனை 85: அக ஒறுத்தல்

நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நாம் அளிக்கக்கூடிய மிகச் சிறந்த கொடைகளுள் ஒன்று, நம் சுயவிருப்பப் பிடிவாதத்தை அவரிடம் ஒப்படைப்பதாகும்.  நமக்கு வேண்டியது, நாம் விரும்பும் நேரத்திலேயே கிடைக்க வேண்டுமென நாம் அடிக்கடி விரும்புகிறோம்.  நம் மனவுறுதி பிடிவாதமாகவும் முரட்டுத்தனமாகவும் மாறி, நம் முழு ஆளுமையையும் எளிதில் ஆட்கொள்ளலாம்.  சுயவிருப்பப் பிடிவாதத்தை நோக்கிய இந்தப் பாவ நாட்டத்தின் விளைவாக, ஒன்று…

சிந்தனை 84: புனித நற்கருணை அப்பம்

மகா பரிசுத்த நற்கருணையில் பிரசன்னமாக இருக்கும் கிறிஸ்துவை நாம் எவ்வளவு ஆழமாக அன்பு செய்து ஆராதித்தாலும் அது போதாது. மகா பரிசுத்த நற்கருணையில் பிரசன்னமாக இருக்கும் அவர்முன் நாம் இருக்கும்போது, மறைவான வடிவில் பிரசன்னமாக இருக்கும் எல்லாம் வல்ல கடவுளைக் காண வேண்டும். அவரே: இரக்கம், நிலைவாழ்வு, நித்திய…

சிந்தனை 83: எப்போதும் செபியுங்கள்

“எப்போதும்” செபிப்பது இயலாத ஒரு செயலாகத் தோன்றலாம். உண்மையில் அவ்வாறு செய்ய முடியுமா? கடவுள் நம்மிடம் இதை எதிர்பார்க்கிறாரா? நிச்சயமாக முடியும்; அவரும் நிச்சயமாக எதிர்பார்க்கிறார். இல்லை, ஒவ்வொரு நாளும் நாள் முழுவதையும் ஆலயத்தில் செபத்தில் செலவிட நாம் அழைக்கப்படுவதில்லை. அழைக்கப்பட்டவர்கள்கூட…

சிந்தனை 82: பற்றுகள்

வாழ்வில் நாம் பற்றுக்கொள்ளக்கூடியவை பல உள்ளன.  சில நேரங்களில் நல்லவற்றின்மீதுகூட நாம் பற்றுக்கொள்ளலாம்.  பெரும்பாலும், நமது பிடிவாதமான சொந்த விருப்பத்தின்மீதுதான் நாம் பற்றுக்கொள்கிறோம்.  நாம் விரும்புவது, நாம் விரும்பும் நேரத்திலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.  உண்மையான ஒன்றை அடைவதற்கான ஒரு திறவுகோல்…